உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முதல்வருக்கு நோட்டீஸ் அனுப்ப தயாராகிறது லோக் ஆயுக்தா

முதல்வருக்கு நோட்டீஸ் அனுப்ப தயாராகிறது லோக் ஆயுக்தா

பெங்களூரு: 'முடா' முறைகேடு தொடர்பாக, முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதியிடம் விசாரணை நடத்திய லோக் ஆயுக்தா, முதல்வரையும் விசாரணைக்கு அழைக்க தயாராகிறது. எந்த நேரத்திலும் அவருக்கு நோட்டீஸ் அளிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.'முடா' எனும் மைசூரு நகர வளர்ச்சி ஆணையத்தில், முதல்வரின் குடும்பத்தினர், சட்டவிரோதமாக மனை பெற்றதாக, மைசூரின் லோக் ஆயுக்தாவில் வழக்குப் பதிவாகியுள்ளது. இது தொடர்பாக, அமலாக்கத்துறையும் விசாரிக்கிறது.சில நாட்களுக்கு முன்பு, லோக் ஆயுக்தா அதிகாரிகள், முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதியிடம் விசாரணை நடத்தினர். அதே போன்று முதல்வர் சித்தராமையாவிடமும் விசாரணை நடக்க வாய்ப்புள்ளது. அவருக்கு நோட்டீஸ் அனுப்பி, விசாரணைக்கு அழைக்க, லோக் ஆயுக்தா தயாராகி வருகிறது.ஒரு வேளை முதல்வர் ஆஜரானால், தன் அரசியல் வாழ்க்கையில் முதன் முறையாக, விசாரணை அமைப்பின் முன் விசாரணைக்கு ஆஜரானதாக இருக்கும்.மற்றொரு பக்கம், அமலாக்கத்துறையும் கூட விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. முடாவின் ஆறு அதிகாரிகளிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் தயாராகின்றனர். ஒரே நாளில் ஆறு பேரையும் விசாரிக்க முடியாது. எனவே வெவ்வேறு நாட்களில் விசாரணை நடத்த, தேதி முடிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை