உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆங்கிலத்தில் பெயர் எழுத தெரியாத மதரசா மாணவர்கள்

ஆங்கிலத்தில் பெயர் எழுத தெரியாத மதரசா மாணவர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: உத்தர பிரதேசத்தின் மதரசா பள்ளிகளில், 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தங்கள் பெயரை ஆங்கிலத்தில் எழுதத் தெரியவில்லை என்பதை, ஆய்வுக்கு சென்ற அதிகாரிகள் கண்டறிந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டது.உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பல்வேறு மாவட்டங்களிலும் அங்கீகாரம் பெற்ற மதரசா பள்ளிகள் நடக்கின்றன. இஸ்லாம் தொடர்பான கல்வி நிறுவனமாக இருந்தாலும், மற்ற பள்ளிகளைப் போலவே இங்கு கல்வி கற்பிக்கப்படுகிறது. இங்குள்ள பஹ்ரைச் மாவட்டத்தில் மட்டும், அங்கீகாரம் பெற்ற 301 மதரசாக்கள் உள்ளன. இது தவிர, அங்கீகாரமற்ற 495 மதரசா பள்ளிகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், மாவட்ட சிறுபான்மையினர் நலத்துறை அதிகாரி சஞ்சய் மிஸ்ரா தலைமையிலான அதிகாரிகள், மதரசா பள்ளிகளில் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது, படி டாக்கியா என்ற இடத்தில் செயல்படும் 'ஜாமியா காஜியா செய்யதுல் உலுாம்' என்ற மதரசா பள்ளியில், 10ம் வகுப்பு மாணவர்கள் ஒருவருக்குகூட அவர்களின் பெயர்களை ஆங்கிலத்தில் எழுதத் தெரியவில்லை என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சஞ்சய் மிஸ்ரா கூறுகையில், “மாணவர்களுக்கு தங்கள் பெயரையும், மதரசாவின் பெயரையும் ஆங்கிலத்தில் எழுதத் தெரியவில்லை. வருகைப் பதிவேட்டில் குறிப்பிட்டிருந்த எண்ணிக்கையைவிட, மிகக் குறைவான மாணவர்களே வகுப்புகளில் இருந்தனர். ஆசிரியர்கள் சிலரும், வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டுவிட்டு வெளியில் சென்று விட்டனர். எனவே, கல்வித்தரத்தை மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்ளாவிட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதரசா நிர்வாகத்துக்கும், ஆசிரியர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Neelachandran
மே 03, 2025 20:20

உபி அரசு நிர்வாக லட்சணத்தை பார்த்தீர்களா.


அப்பாவி
ஏப் 29, 2025 11:15

யாரோடும் ஒத்துப்போகாது.


ஆரூர் ரங்
ஏப் 29, 2025 11:02

மதக் கல்வியை மட்டுமே பயிற்றுவிக்கும் மதரசா களுக்கு மதசார்பற்ற அரசின் நிதியுதவி கூடாது. பொதுக்கல்வி மறுக்கப்பட்டால் அடிப்படை தீவீரவாத கல்வி மட்டுமே கற்பர்.


Padmasridharan
ஏப் 29, 2025 06:39

மத பெயர்களைச் சொல்லி மனித வேலைகளை தட்டி கழிக்கும் இது மாதிரி நிறைய பேர் அவர்கள் நம்பும் கடவுள், மனித உருவத்தில் அவர்களுடனே நடமாடி கொண்டிருக்கிறார் என்பது நம்பும் வரையில் இவர்கள் மாறமாட்டார்கள் சாமியோவ்.


Ramesh
ஏப் 29, 2025 06:22

இது என்ன பிரமாதம் நம்ம ஆளுகளுக்கு தமிழிலேயே பெயர் எழுத தெரியாது


Keshavan.J
ஏப் 29, 2025 05:59

முதலில் அவர்களை உருதுவில் பெயரை எழுத சொல்லுங்கள். அங்கு வெறும் மனப்பாடம் தான் நடக்குது.


நிக்கோல்தாம்சன்
ஏப் 29, 2025 04:24

இவர்களும் ஏதாவது கோட்டாவில் அரசு வேளையில் சேர்ந்துவிட்டால் ?


அப்பாவி
ஏப் 29, 2025 03:58

அங்கே மும்மொழி சொல்லிக் குடுக்கறாங்கோ ஹைன்.


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஏப் 29, 2025 11:27

1. மதத்தின் பெயரால் மூட நம்பிக்கை 2 இனவெறி 3 பயங்கர வாதம் மூன்று மொழி சொல்லிக்கொடுக்கிறாங்க மைன்


Kasimani Baskaran
ஏப் 29, 2025 03:56

மதராஸாக்களை மூடவில்லை என்றால் திராவிடர்களை விட மோசமான ஒரு சமுதாயம் தொடர்ந்து உருவாக்கப்படும்.


புதிய வீடியோ