உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்திரா நகரில் கிடைக்கும் மதுரை அயிரை மீன் குழம்பு

இந்திரா நகரில் கிடைக்கும் மதுரை அயிரை மீன் குழம்பு

அசைவ பிரியர்கள் சிலர் சிக்கன், மட்டன் விரும்புவர்; சிலர் மீன்கள் விரும்புவர். அவர்களில் பலர் கடல் மீன்களையும், சிலர் ஆற்று மீன்களையும் விரும்பு சாப்பிடுவர்.என்ன தான் நாம் பலவகை மீன்களை சாப்பிட்டாலும், மதுரையில் கிடைக்கக்கூடிய அயிரை மீன் குழம்பிற்கு ஈடு இணை எதுவும் கிடையாது. அந்த அளவுக்கு ருசி அதிகம். அயிரை மீன் குழம்பு ஊற்றி, சோற்றுடன் பிசைந்து சாப்பிட்டால், அதன் ருசியே தனி.நல்லெண்ணெய் ஊற்றிச் செய்தால், ருசியை கூட்டி, ஒரு பிடி பிடித்து விடுவோம். அந்த மதுரை சுவை மாறாமல், பெங்களூரில் அயிரை மீன் குழம்பு செய்யப்படுகிறது. இந்திராநகர் டபுள் ரோட்டில் உள்ள சுவை உணவகத்தில், மதுரை சுவையில் கிடைக்கிறது.இதை சாப்பிடுவதற்காகவே சுற்று வட்டார தமிழர்கள் வரிசையில் நிற்கின்றனர். மேலும், நகரின் பல பகுதிகளில் இருந்தும் வந்து சாப்பிட்டு செல்கின்றனர். ஆன்லைனிலும் ஆர்டர் செய்து, வீட்டுக்கு வரவழைத்து சாப்பிடுவோர் ஏராளம்.இந்த சுவை உணவகம், தினமும் காலை 11:00 முதல் நள்ளிரவு 12:00 மணி வரை திறந்திருக்கும். காலையிலேயே மட்டன் பாயா, மட்டன் பெப்பர் ரோஸ்ட், மட்டன் ஆயில் சுக்கா, மட்டன் கொத்து கறி, செட்டிநாடு சிக்கன் கிரேவி, நாட்டுக்கோழி ரோஸ்ட், அயிரை மீன் குழம்பு ருசிக்கலாம்.மதியம் மற்றும் இரவில் நாட்டுக்கோழி சூப், மட்டன் எலும்பு சூப், மட்டன் பாயா சூப், நண்டு சூப், வறுவல், குழம்பு, கறி தோசை, நெத்திலி மீன் வறுவல், விறால் மீன் குழம்பு, வறுவல், இறால் தொக்கு உட்பட ஏராளமான வகைகள் ருசிக்க ஏற்ற இடம் என்றே சொல்லலாம்.அனைத்தும் தமிழகத்தின் கிராமத்து சுவையில் வழங்கப்படுவதால், காலை முதல், இரவு வரை வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். வார இறுதி நாட்களில் குடும்பம், குடும்பமாக வந்து ருசிப்பதையும் காண முடிகிறது. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை