வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கள்ளக் காதல் படுத்தும்பாடு.
மேலும் செய்திகள்
கேரளாவுக்கு கனமழை எச்சரிக்கை
04-Sep-2025
திருவனந்தபுரம்:மதுரையை சேர்ந்த வாலிபர், இளம்பெண் திருவனந்தபுரம் அருகே ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தனர். கேரள மாநிலம், திருவனந்தபுரம், பேட்டை அருகே கொச்சுவேளி பகுதியில் நேற்று அதிகாலை, 12.30 மணி அளவில் வாலிபர் - இளம்பெண் ரயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக தெரிய வந்தது. ரயில்வே பாதுகாப்பு படையினர் உடல்களை திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அவர்களிடம் இருந்த ஆதார் அட்டை அடிப்படையில் இறந்த வாலிபர் மதுரை, தாசில்தார் நகரை சேர்ந்த வினோத் கண்ணன், 30 என்பதும், பெண் மதுரை ஆழ்வார்புரத்தை சேர்ந்த விசாலாட்சி, 25, என்பதும் தெரியவந்தது. இருவரும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்திருக்கலாம் என, போலீசார் கருதுகின்றனர். இருவரும் கணவன், மனைவியா, காதலர்களா, இறப்பிற்கான காரணம் என்ன என, போலீசார் விசாரிக்கின்றனர்.
கள்ளக் காதல் படுத்தும்பாடு.
04-Sep-2025