உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் மஹாராஜா நடிகர்

பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் மஹாராஜா நடிகர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: பிராமணர்களுக்கு எதிராக அவதுாறாக பேசியிருந்த இயக்குநரும், நடிகருமான அனுராக் காஷ்யப், தன் கருத்துக்கு நேற்று மன்னிப்பு கோரினார்.இயக்குநர் அனந்த மஹாதேவன் இயக்கத்தில் பிரதிக் காந்தி மற்றும் பத்ரலோக உள்ளிட்டோர் நடித்துள்ள ஹிந்தி படம் புலே. ஜாதி மற்றும் பாலின சமத்துவமின்மைக்கு எதிராக போராடிய ஜோதிராவ், சாவித்ரி புலே தம்பதியின் வாழ்க்கை வரலாற்றை சித்திரிக்கும் விதமாக எடுக்கப்பட்ட இந்த படம், ஜோதிராவ் புலேவின் 198வது பிறந்த நாளான ஏப்., 11ல் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இந்த படத்தில் பிராமணருக்கு எதிரான கருத்துகள் இருப்பதாக சில பிராமண அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. மத்திய தணிக்கை வாரியமும் ஒருசில காட்சிகளை நீக்குமாறு இயக்குநரை அறிவுறுத்தியது.இதையடுத்து, புலே படம் வரும் 25ம் தேதி வெளியாக உள்ளது. இந்த சூழலில், பிரபல ஹிந்தி பட இயக்குநரும், லியோ, மஹாராஜா உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவருமான அனுராக் காஷ்யப் புலே படத்துக்கு ஆதரவாக சமீபத்தில் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.

மோசடி அமைப்பு

அதில், 'பிராமணர்கள் புலே படத்தை ஏன் எதிர்க்கின்றனர்? ஜாதியை ஒழித்துவிட்டதாகச் சொல்கிறீர்களே, ஜாதிகளே இல்லையென்றால் நீங்கள் எப்படி பிராமணர்கள் ஆவீர்கள்? நீங்கள் யார்? ஏன் படத்தை எதிர்க்கிறீர்கள்? ஜாதிகளே இல்லையெனில் சாவித்ரிபாய், ஜோதிராவ் புலே ஏன் போராடினர்? திரைப்பட சான்றிதழ் வாரியம் ஒரு மோசடி அமைப்பு. 'இந்தியாவில் ஜாதி இருக்கா... இல்லையா என்று அனைவரும் கூடி ஒரு முடிவுக்கு வாருங்கள்' என, பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவுக்கு பலரும் கேள்வி கேட்டு வந்ததால் கடுப்பான அனுராக் காஷ்யப், பிராமணர்களை இழிவுபடுத்தும் விதமாக கருத்து தெரிவித்தார். இதற்கு, பிராமண அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதைத் தொடர்ந்து அனுராக் காஷ்யப், அவரின் குடும்பத்தினர், நண்பர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, தன் கருத்துக்கு அவர் நேற்று மன்னிப்பு கோரியுள்ளார்.

கொலை மிரட்டல்

அவர் கூறியுள்ளதாவது:இது என் மன்னிப்பு. ஆனால், இது என் பதிவுக்காக அல்ல. முக்கியமானவற்றை விட்டுவிட்டு ஒரு வரியை எடுத்துக்கொண்டு வெறுப்பைப் பரப்புகின்றனர். நான் பேசியதிலிருந்து பின் வாங்கமாட்டேன். என்னை எவ்வளவு வேண்டுமானாலும் திட்டுங்கள்.என் குடும்பம் எதுவுமே சொல்லவில்லை. உங்களுக்கு மன்னிப்பு வேண்டுமானால் இதோ இங்கிருக்கிறது. ஹிந்து சமூகத்தைச் சேர்ந்த முக்கியமான நபர்களிடம் இருந்து என் மகள், குடும்பம், நண்பர்கள், உடன் வேலை செய்பவர்களுக்கு கொலை மிரட்டல், பாலியல் வன்கொடுமை போன்ற மிரட்டல்கள் வருவது சரியில்லை.பிராமணர்களே தயவுசெய்து பெண்களை விட்டுவிடுங்கள். மனுஸ்மிருதி உட்பட அனைத்து வேதங்களும் கண்ணியத்தை கற்பிக்கின்றன. நீங்கள் உண்மையில் எந்த வகையான பிராமணர்கள் என்பதை நீங்களே முடிவு எடுத்து கொள்ளுங்கள். நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

Krishna
ஏப் 23, 2025 09:30

மனு ஸ்மிரிட்டி எழுதியன் ப்ராமணர் அல்ல.அரச பரம்பரை. இப்பொழுது ஜாதி கலவரங்களுக்கு முக்கிய காரணம் அரசியல் கட்சிகள். பிராமணர் அல்ல.


பல்லவி
ஏப் 23, 2025 01:15

ஒரு முதுமொழி உண்டு பட்டியை அடிப்பானேன் அதன் எச்சத்தை சும்ப்பானேன்


Tetra
ஏப் 21, 2025 11:45

இவன் பேசியதற்கு இவனை செருப்பால் அடிக்க வேண்டும்


TRE
ஏப் 21, 2025 09:58

ஹிந்து சமூகத்தைச் சேர்ந்த முக்கியமான நபர்களிடம் இருந்து என் மகள், குடும்பம், நண்பர்கள், உடன் வேலை செய்பவர்களுக்கு கொலை மிரட்டல், பாலியல் வன்கொடுமை போன்ற மிரட்டல்கள் வருவதால் மன்னிப்பு கேட்கிறேன் .


கல்யாணராமன் மறைமலை நகர்
ஏப் 20, 2025 20:06

இங்கே ஜாதி வேண்டாம் என்று பேசுபவர்களும், அரசியல்வாதிகளும் ஜாதியை அடிப்படையாக வைத்து வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை ஒழிக்கக் குரல் கொடுப்பார்களா? திறமை அடிப்படையில் வரட்டும். பிராமணனுக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசம் அப்போது புரியும்.


தஞ்சை மன்னர்
ஏப் 20, 2025 13:01

அருமை அனுராக் காஷ்யப் நல்ல நடிகர் பிராமணர்கள் அவர்களின் முன்னோர்களைத்தான் திட்டி தீர்த்து கொள்ளவேண்டும் அவர்களால் தான் நீங்கள் இன்று இவ்வளவு இவ்வளவுக்கு கேவலமாக அடுத்தவரின் வாயில் உட்கார்ந்து இருக்கின்றீர்கள்


ஆரூர் ரங்
ஏப் 20, 2025 13:20

மனு சாத்திரங்களை எழுதியது பிராமணர்களல்ல. அரசர்கள் எனும் சத்திரிய வம்சத்தினர் தங்களது ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள எழுதியவை. உங்க அரபி புனித புத்தகத்தில் கூட பல குல, இன ஏற்றத்தாழ்வு வார்த்தைகள் உள்ளன. நாகரீகம் கருதி நான் குறிப்பிடவில்லை.


Tetra
ஏப் 21, 2025 11:50

எங்கள் முன்னோர் எல்லோரையும் சம நோக்கில்தான் பார்த்தார்கள். ஆனால் நீங்கள் தூக்கி பிடிக்கும் ப்ர்யாணியுமா கேக்கும் தான் எல்லோரையும் ப்ராம்மணர்களையும் இழிவு படுத்தினர்.ப்ராம்மணன் ஒதுங்கிக்கொண்டான். மற்றவர்கள் ?அவர்களை தாங்கிக்கொண்டிருக்கிறீர்கள்


MUTHU
ஏப் 20, 2025 09:15

சாதீயம் எங்கும் தலையை விரிச்சுக்கிட்டு ஒன்னும் ஆடலை. அரசாங்கம் மற்றும் விளங்காத ஆட்சியாளர்களை கொண்டுதான் அது திரும்ப திரும்ப உயிர் பெற்று கொண்டு இருக்கின்றது. முதலில் திராவிடர் திருவாத்தங்களை ஒழித்தால் சாதீயம் மென்மை பெற்று விடும். பின்பு தானாக அழிந்து விடும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 20, 2025 09:14

கட்டை விறல் இருப்பதால் மற்ற விரல்களுக்குப் பலம்.. கட்டை விரலை நீக்கிவிட்டால் மற்ற விரல்களால் பயனில்லை. அதனால்தான் இவர்கள் கட்டை விரல்களைத் தாக்குகிறார்கள் ....


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 20, 2025 09:10

பிராம்மணர்கள் மட்டுமே தேர்ந்தெடுத்ததால் பாஜக மத்தியில் மூன்றாம் முறை ஆட்சியமைத்ததா ??


Sampath Kumar
ஏப் 20, 2025 08:52

இன்றய நிலையில் நாம நாட்டில் சாதி என்பது தீயாய் எரிந்து கொண்டு உள்ளது அதை யாரும் மறுக்க முடியாது இந்த இலைக்கு யார் காரணம்? ஆராய்ந்து பாருங்கள் வரலாற்றில் சில பக்கம் ரத்த கரை படிந்ததக்க உள்ளதே அதுக்கு யார் பொறுப்பு? ஒரு குறிப்பிட்ட சமூகம் தொடர்ந்து மற்ற சமுகத்தின் மீது ஆதிக்கம் செலுத்தி வருகிறதே அது ஏன்? யாரு அந்த சமூகம்? பாதிக்க பட்ட மாக்கம் இன்று கேள்வி காக்கின்றது அது தவறு என்றால் பாதிக்க வைத்தவனும் தவறு செய்தவனே அதை தட்டி கேட்டால் பொங்குவது முகாரி அற்ற செயலே அதுக்கு இந்திய சட்டம் இடம் அளிக்கிறது சேவை செய்கிறது இதை எப்படி மற்ற சமூகம் ஏற்று கொள்ளும்? மேலும் மேலும் ஏரியும் தீயில் என்னை விடும் செயலாகும் ஆண்டவன் படிப்பில் எவனும் உயர்ந்தவனும் இல்லை தாழ்ந்தவனும் இல்லை சில கற்குறிகள் தங்கள் படித்து விட்டோம் என்ற மமதையில் ஆடினால் அதுக்கு காலம் ஏற்றது அல்ல திருப்பி அடித்தால் நீ தங்க மாட்டாய் அடக்கி வாசி


Sathyan
ஏப் 20, 2025 13:15

இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்பதை முதலில் யோசி, அது தவறு என்றால் நீ இப்போது அதே தவறை செய்து கொண்டிருக்கிறாய். பிறகு ஏன் பொங்குகிறாய்? தவறு என்று நீ சொல்வதை திருத்த இன்னொரு தவறா?


ஆரூர் ரங்
ஏப் 20, 2025 13:15

தமிழகத்தைச் சேர்ந்த எந்த பிராமணராவது சாதீய வன்கொடுமை அல்லது ஆணவக்கொலை செய்ததாக வழக்கு உண்டா? ஆணவக்கொலை செய்யும் சமூகங்கள் சாதியடிப்படையில் இடஒதுக்கீட்டை அனுபவிக்கின்றனரே. அது சரியா?.


Keshavan.J
ஏப் 21, 2025 18:09

நிலைக்கு பதில் இலைக்கு என்று எழுதிகிறாய், ஆண்டவன் படைப்பில் பதிலாக படிப்பில் என்று எழுதிகிறாய்.. தற்குறி , கற்குறி இல்லை , தங்கள் இல்லை தாங்கள். இப்படி எழுதியதற்கு அந்த முட்டாள்பய உன்னை அடிக்க வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை