உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மஹாராஷ்டிராவில் மேகவெடிப்பு உருவாகும் சூழல்; முன் எச்சரிக்கை நடவடிக்கைகளில் அதிகாரிகள் மும்முரம்

மஹாராஷ்டிராவில் மேகவெடிப்பு உருவாகும் சூழல்; முன் எச்சரிக்கை நடவடிக்கைகளில் அதிகாரிகள் மும்முரம்

மும்பை; மஹாராஷ்டிராவில் பல்வேறு பகுதிகளில் மேகவெடிப்பு உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதால் 10 கிராமங்களுக்கு பாதிப்பு நேரிடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.அண்மைக்காலமாக பெய்து வரும் கனமழையால் வடமாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஹிமாச்சல் பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட் என பல மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.மஹாராஷ்டிராவிலும் பெய்து வரும் கனமழை பெரும் சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஜல்னா,பீட், நாந்தேட் உள்ளிட்ட பல மாவட்டங்களில் அதிகமான மழைபொழிவு பதிவாகி உள்ளது.கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் மழைக்கு 3 பேர் பலியாகி உள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் களம் இறங்கி உள்ளனர்.இந் நிலையில், ஜல்கான் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் மேக வெடிப்புக்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக மாவட்ட கலெக்டர் ஆயுஷ் பிரசாத் கூறி உள்ளார். இதனால் 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்.அவர் மேலும் கூறியதாவது; ஜல்கான் மற்றும் அதனை ஒட்டிய இடங்களில் மேகவெடிப்பு ஏற்படும் சூழல் காணப்படுகிறது. கனமழைக காரணமாக ஆறுகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட 452 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. 2500 ஹெக்டேர் நிலம் சேதம் அடைந்துள்ளது. பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு உள்ளனர்.அவர்களுக்கு உணவு வினியோகிக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு ஆயுஷ் பிரசாத் கூறினார்.முன்னதாக ஜல்கான் மாவட்டத்தில் உள்ள 4 தாலுகாக்களில் பெய்து வரும் கனமழையால் விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட நீர்வளம், பேரிடர் மேலாண்மை அமைச்சர் கிரிஷ் மகாஜன் சேத மதிப்பீட்டை ஆய்வு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

ஜெகதீசன்
செப் 17, 2025 13:20

அதி கன மழை வேறு, மேக வெடிப்பு வேறு. ஒரு மணி நேரத்தில் 100 மி.மீ அளவிலான மழை ஒரு குறுகிய இடபரப்பில் ஏற்பட்டால் மட்டுமே மேக வெடிப்பு. இது பொதுவாக மலை பிரதேச நிகழ்வு.


நிக்கோல்தாம்சன்
செப் 17, 2025 13:19

இந்த மேகவெடிப்பு குறித்து மேலதிக தகவல்களை பகிர என்ன தயக்கம்


பிரேம்ஜி
செப் 18, 2025 07:35

தெரிந்தால் தானே சொல்ல? காரணம் தெரியவில்லை என்று சொல்ல வெட்கப் பட்டு 'மேக வெடிப்பு' 'மின்னல் இடிப்பு ' என்று சொல்வது தமிழர் மரபு! திராவிட மாடல் மாதிரி தான்!


R Dhasarathan
செப் 17, 2025 09:54

இந்த மாதிரி மேக வெடிப்புக்கு காரணம் என்ன என்று ஏன் வெளிப்படையாக சொல்ல மாட்டேன்கிறார்கள்.... செல்போன் டவரில் இருக்கும் இடிதாங்கிகளா அல்லது வேறு ஏதேனும் காரணங்களா...ஆய்வறிக்கை வெளியிட வேண்டும்....


நிக்கோல்தாம்சன்
செப் 20, 2025 04:50

இடிதாங்கிகள் எப்படி சட்டென்று குளிரை கொண்டுவரமுடியும் , மேகவெடிப்பு நடந்த இடங்களில் எல்லாம் நல்ல வெய்யிலும் , 45 நிமிடம் முதல் 150 நிமிடங்களில் 19 டிகிரி குளிரும் மாறியிருக்கிறது , இது மூன்று முதல் 16 கிமி சுற்றளவில் நடந்துள்ளது . இது போன்று வேறென்ன கவனத்தில் வந்துள்ளது ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை