உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கண்காட்சியில் விநியோகிக்கப்பட்ட உணவு நஞ்சானது! 250 பேர் மருத்துவமனையில் அனுமதி

கண்காட்சியில் விநியோகிக்கப்பட்ட உணவு நஞ்சானது! 250 பேர் மருத்துவமனையில் அனுமதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோலாப்பூர்: மகாராஷ்டிராவில் நஞ்சான உணவை உண்ட 250 பேர் உடல்நிலைக் கோளாறால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இதுபற்றிய விவரம் வருமாறு; கோலாப்பூர் மாவட்டத்தில் ஷிவ்னக்வாடி என்ற கிராமத்தில் கண்காட்சி ஒன்று நடந்தது. இந்த கண்காட்சியை ஆயிரக்கணக்கான ஊர் மக்கள் கண்டுகளித்தனர். அங்கு அவர்கள் அனைவரும் பாலில் இருந்து தயாரிக்கப்படும் கீர் என்ற உணவு பொருளை உண்டனர். இதை சாப்பிட்ட சிலருக்கு உடல்நிலை பாதிக்கப்பட அவர்கள் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினர். அதன் பின்னர் ஒருவர் பின் ஒருவராக பலருக்கும் வயிற்றுப் போக்கு, வாந்தி, குமட்டல் போன்ற தொந்தரவுகள் ஏற்பட்டன. இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட 250க்கும் மேற்பட்டோர் அங்குள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் உணவு நஞ்சானதே உடல்நிலை பாதிக்க காரணம் என்று கூறி உள்ளனர். அனைவரும் அபாய கட்டத்தை தாண்டி விட்டனர் என்று தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

அப்பாவி
பிப் 05, 2025 17:00

இந்தியாவில் எல்லாமே ரொம்ப குறைஞ்ச விலை. ஆனா, எதுக்கும் உத்தரவாதம்.இல்லை.


Veeraraghavan Jagannathan
பிப் 05, 2025 15:39

பாக்கெட் பாலாக இருந்தால் காய்ச்ச வேண்டும் அவசியம் இல்லை. அது ஏற்கனவே காய்ச்சியது தான். இல்லாவிட்டால் அவசியம் காய்ச்ச வேண்டும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 05, 2025 14:53

வடமாநிலங்களில் பல இடங்களில் பாலைக் காய்ச்சாமலேயே ரோஸ் மில்க் போன்றவற்றைக் கலந்து கொடுக்கிறார்கள். தமிழகத்திலும் இந்தப்பழக்கம் வந்துள்ளது ..... மிகவும் தவறான செயல் .....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை