உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மஹா.,வில் கார்- பைக் மோதி விபத்து; 7 பேர் உயிரிழப்பு

மஹா.,வில் கார்- பைக் மோதி விபத்து; 7 பேர் உயிரிழப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மஹாராஷ்டிராவில் கார்- பைக் மோதி ஏற்பட்ட விபத்தில், 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் கார்- பைக் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விரைந்தனர். பைக் மற்றும் கார் பலத்த சேதம் அடைந்துள்ளது. இந்த விபத்து நள்ளிரவு 11.57 மணி அளவில் நிகழ்ந்துள்ளது. விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது என போலீசார் தெரிவித்தனர். நள்ளிரவு நேரம், அதிகாலையில் வாகன பயணத்தை தவிர்ப்பது நல்லது. வாகனம் ஓட்டுபவர், தூக்க கலக்கத்தில் சற்று அசந்தாலும் பெரும் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

அப்பாவி
ஜூலை 17, 2025 16:01

ராத்திரி எட்டு மணிக்கு மேல் வெளியே போகாமலிருப்பதே நல்லது. தேடி வந்து போட்டுத்தள்ளும் கதிசக்தி.


ரங்ஸ்
ஜூலை 17, 2025 14:04

காரும் பைக்கும் மோதினால் ஏழு பேர் இறப்பு எப்படி ? புரியலியே.