உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மேக் இன் இந்தியா திட்டம்: ராகுல் சொல்வது இதுதான்!

மேக் இன் இந்தியா திட்டம்: ராகுல் சொல்வது இதுதான்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''மேக் இன் இந்தியா சிறந்த திட்டம் என்றாலும், அது தோல்வியடைந்துள்ளது என்பதை பிரதமர் ஒத்துக் கொள்ள வேண்டும்,'' என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கூறியுள்ளார்.இது தொடர்பாக ராகுல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பிரதமர் அவர்களே, உங்களது பேச்சில், ' மேக் இன் இந்தியா' திட்டம் குறித்து பேசவில்லை. ' மேக் இன் இந்தியா' திட்டம் சிறந்த திட்டம் என்றாலும், அது தோல்வியடைந்தது என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும். ஜிடிபி.,யில் நாட்டின் உற்பத்தி 2012 ல் இருந்த 15.3 சதவீமாக இருந்தது தற்போது 12.3 சதவீதமாக குறைந்துள்ளது. இது, கடந்த 60 ஆண்டுகளில் மிகவும் குறைவாகும்.இந்திய இளைஞர்கள் வேலைவாய்ப்பை எதிர்பார்க்கின்றனர். ஆனால், சமீப நாட்களில் தே.ஜ., அல்லது ஐக்கிய முற்போக்கு கூட்டணி உள்ளிட்ட எந்த அரசும், இந்த சவாலை எதிர்கொள்ள முடியவில்லை. நமது உற்பத்தி துறை பின்தங்கியதற்கு என்ன காரணம் என்பதை கண்டுபிடிக்கவும், சர்வதேச அளவில் போட்டி போடும் வகையிலும் கொள்கை உருவாக்க வேண்டும்.இந்தியாவில் உற்பத்திக்கான இந்த தொலைநோக்குப் பார்வையானது, மின்சார மோட்டார்கள். பேட்டரிகள் மற்றும் ஏஐ போன்ற வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்த வேண்டும். நமது உற்பத்தித்துறையை புத்துயிர் பெறவும், அதிநவீன உற்பத்தி திறனை வகுக்கவும், நமக்கு தேவையான பணிகளை உருவாக்கவும் இதுவே ஒரே வழி.சீனா நம்மை விட 10 ஆண்டுகள் முன்னேறிய நிலையில் , வலுவான தொழில் அமைப்புடன் உள்ளது. இதனால், தான் அந்நாடு நம்மிடம் சவால் விடுகிறது. அவர்களுடன் திறமையாக போட்டியிடுவதற்கான நம்மிடம் உள்ள ஒரே வழி, நமது உற்பத்தி அமைப்புகளை உருவாக்கவும், அதற்கான தொலைநோக்கு பார்வையும் தேவை. இவ்வாறு அந்த அறிக்கையில் ராகுல் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

jss
பிப் 06, 2025 15:28

இந்த ஆள் மேக் இன் இந்தியா திட்டத்தைப்பற்றி பேச வக்கற்றவன். இவனது கூட்டணி கட்சிகள் இவனுடன் சேர்த்து ஊழல் திலகங்கள். இதுகாறும் ஊழல் செய்து பழக்கப்பட்டவர்களுக்கு ஊழல் மட்டுமே ்மேக் இன் இந்தியா திட்டம்.


கண்ணன்
பிப் 06, 2025 14:16

படிப்பறிவற்றோரின் உளறல்கள்தான் காங் உறுப்புனர்கள் பேசுவது


பேசும் தமிழன்
பிப் 06, 2025 08:15

அட பப்பு... உனக்கு இருக்கும் அறிவுக்கு நீ இத்தாலி அதிபராக வர வேண்டியவர்..... பாவம் இந்தியர்கள் உங்களின் தீவிரவாதிகள் ஆதரவு நிலைப்பாட்டை கண்டு..... உங்கள் கட்சியை நம்பாமல்.... தேர்தலில் விரட்டி விரட்டி அடிக்கிறார்கள்..... நீ வேண்டுமானால் பாகிஸ்தான் அல்லது இத்தாலியில் முயற்சி செய்து பார்க்கலாம்......அங்கே உனக்கு வளமான எதிர்காலம் காத்து கொண்டு இருக்கிறது.


மணி
பிப் 06, 2025 08:01

இந்த லூசே மேக்இன் இந்தியா கிடையாது!!!


JAYACHANDRAN RAMAKRISHNAN
பிப் 06, 2025 07:26

இவரும் இவரது கூட்டாளி கட்சிகள் திமுக உட்பட அனைவருமே சைனாவை எப்பொழுதும் ஒப்பிட்டு பேசி நமது நாட்டை சிறுமைப் படுத்துவதையே முழு நேர தொழிலாக வைத்துள்ளார்கள். ஜிடிபி குறைந்துள்ளது என்றால் வரி வருவாய் எப்படி மாதம் இரண்டு இலட்சத்தை தொடும். சாலைகளில் சைக்கிள்கள் இவர்கள் காங்கிரஸ் ஆட்சியில் பிரதான வாகனமாக இருந்தது. தற்போது மோட்டார் பைக்குகள் பிரதான வாகனமாக உள்ளது. மதிய நேரத்தில் நகர பேருந்துகள் குறைவாகவே இயக்கப்படுகிறது. தனியார் பேருந்துகள் கூட மதிய நேரத்தில் இயக்குவது இல்லை. காரணம் பேருந்து பயணங்கள் குறைந்து மோட்டார் இரு சக்கர வாகனங்கள் அதிகரித்து தான் காரணம். திரு ராகுல் சைனா வின் உளவுத்துறையில் பணியில் இருப்பார் போல. எதற்கும் ரா உளவு அமைப்பு தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.


PARTHASARATHI J S
பிப் 06, 2025 07:15

முழுக்க முழுக்க முளை மழுங்கிய மனிதன் ராகுல். அவனையும் விட முடியாமல் திணறுகிறது காங்கிரஸ். சீன பைத்தியம். நாடு கடத்தப்பட வேண்டியவன்.


S.R
பிப் 06, 2025 06:54

ஸ்ரீ ஸ்ரீ பப்பு அவர்களே. 60 ஆண்டு காலம் எத்தனை "Make in இந்தியா " காங்கிரஸ் செய்து விட்டது. அது சரி திடீர் என்று அறிவு பூர்வமாக பேசுகிறீர்கள். யார் உங்களுக்கு நோட்ஸ் எழுதிக் கொடுப்பது. உங்களுக்கும், உங்கள் கட்சிக்கு பேச வாய் இல்லை.


vadivelu
பிப் 06, 2025 01:14

பாவம. இப்படி உயிர் ள்ளவரை ஒருவரை புலம்ப வைத்து விட்டாரே. இரக்கமே இல்லையா , திரும்ப திரும்ப இப்பிணி இவரை பாராளுமன்றம் அனுப்பி மன கஷ்டத்தை கொடுக்க கூடாது.


Bhakt
பிப் 05, 2025 22:46

சரிங்க பப்பூ ஜி, நீங்கள் ஆளும் மாநிலங்களில் ஜிலேபி தொழிற்சாலை, உருளையை தங்கமாக மாற்றும் தொழிற்சாலை எல்லாம் ஆரம்பித்து சீனாவுக்கு சவால் விடலாமே.


Bhakt
பிப் 05, 2025 22:39

சூடு சொரணையே இல்லை...நேத்து தான் மோடி பாராளுமன்றத்தில் நன்றி உரை மூலம் கூறினார்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை