உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு எதிர்ப்பு; மேற்கு வங்கத்தில் மம்தா பிரமாண்ட பேரணி

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு எதிர்ப்பு; மேற்கு வங்கத்தில் மம்தா பிரமாண்ட பேரணி

கோல்கட்டா: பீஹாரில் எத்தனை ரோஹிங்கியாக்கள் அடையாளம் காணப்பட்டனர்? தேர்தல் கமிஷன் அவர்களின் பெயர்களை நீக்கிவிட்டதா? என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பி உள்ளார்.வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை எதிர்த்து, முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில்,மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது. மேற்கு வங்க அமைச்சர்கள், திரிணமுல் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் இப்பேரணியில் பங்கேற்றனர். அப்போது, திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியான அபிஷேக் பானர்ஜி, பாஜவை கடுமையாக விமர்சித்து பேசினார்.அவர் பேசியதாவது: இரண்டு நாட்களில் இவ்வளவு பெரிய கூட்டத்தை திரட்ட முடியும் என்றால், டில்லியில் எங்கள் போராட்டத்திற்கு எவ்வளவு பேர் திரள்வார்கள் என்பதை பாஜ கண்டிப்பாக யோசித்து பார்க்க வேண்டும். டில்லி ஜமீன்தாரர்களுக்கு நாங்கள் அடிபணிய மாட்டோம், என்றார்.பின்னர் பேரணியில் மம்தா பானர்ஜி பேசுகையில், பீஹாரில் எத்தனை ரோஹிங்கியாக்கள் அடையாளம் காணப்பட்டனர்? அவர்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து தேர்தல் கமிஷன் நீக்கி விட்டதா என்று கேள்வி எழுப்பினார்.

பாஜ கண்டனம்

மம்தா தலைமையில் நடந்த பேரணிக்கு, மேற்குவங்க மாநில எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி எதிர்ப்பு தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது: மேற்குவங்க மாநிலத்தில் சட்ட ஒழுங்கு பாதுகாப்பு இல்லை. வாக்காளர் பட்டியலில் ரோஹிங்கியாக்களை சேர்க்க திரிணமுல் காங்., அரசு ஊக்குவிக்கிறது. ரோஹிங்கியாக்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவதை பொதுமக்கள் விரும்புகிறார்களா? இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார்.

தமிழகத்தில்...!

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் அடிப்படையில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்த பணிகளை தமிழகத்தில் மேற்கொள்ளக்கூடாது என சுப்ரீம் கோர்ட்டில் திமுக அரசு வழக்கு தொடர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Iyer
நவ 05, 2025 01:47

""பீஹாரில் எத்தனை ரோஹிங்கியாக்கள் அடையாளம் காணப்பட்டனர்? தேர்தல் கமிஷன் அவர்களின் பெயர்களை நீக்கிவிட்டதா? என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பி உள்ளார்.""B" - 68 லக்ஷம் வாக்காளர்கள் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன - பிஹாரில் இதில் - 1.பங்களாதேஷிகள், 2. இறந்துபோனர்வர்கள், 3. வேறு இடத்திலும் பதிவு செய்தவர்கள் - அடங்குவர்


முக்கிய வீடியோ