உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹரியானா காங்., பெண் நிர்வாகி கொலை வழக்கு; குற்றவாளி கைது

ஹரியானா காங்., பெண் நிர்வாகி கொலை வழக்கு; குற்றவாளி கைது

சண்டிகர்: ஹரியானாவில் காங்கிரஸ் பெண் தொண்டர் கொலை வழக்கில், ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.ஹரியானாவின் ரோதக் மாவட்டத்தில் உள்ள பஸ் நிலையம் அருகே சூட்கேஸில், ஒரு இளம் பெண் உடல் கண்டெடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார், மற்றும் தடயவியல் நிபுணர்கள் விரைந்தனர். இது குறித்த போலீசார் நடத்திய விசாரணையில் காங்கிரஸ் கட்சியின் 22 வயது பெண் நிர்வாகி ஹிமானி நர்வாலின் உடல் என்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது குறித்து விசாரிக்க தனிப்படை ஒன்றும் அமைக்கப்பட்டு இருந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=syavv7lw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஒரு குற்றவாளி கைது செய்யப்பட்ட உடனேயே, ஹிமானியின் குடும்பத்தினர் மரண தண்டனை கோரினர், மேலும் அவரது உடல் இன்று தகனம் செய்யப்படும் என்றும் கூறினர். இது குறித்து ஹிமானியின் சகோதரர் ஜதின் கூறியதாவது: ஒரு குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். இன்று அவரது உடல் (ஹிமானி நர்வால்) தகனம் செய்வோம். ஊடகங்களில் நிறைய வதந்திகள் பரவி வருகின்றன. எங்களுக்கு நீதி கிடைக்கும். குற்றம் சாட்டப்பட்டவர் யார் என்பது எங்களுக்கு இன்னும் தெரியவில்லை; போலீசார் எங்களுக்கு எந்த தகவலும் கொடுக்கவில்லை. குற்றம் சாட்டப்பட்டவருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ