கிரிப்டோகரன்சி ரூ.1.03 கோடி மோசடி செய்தவர் கைது
தானே: மஹாராஷ்டிர மாநிலம் மும்பை ஜெரிமாரி பகுதியை சேர்ந்த இளைஞர், கிரிப்டோகரன்சி எனப்படும் மெய்நிகர் நாணயத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என சமுக வலைதளத்தில் விளம்பரம் செய்தார். இந்த விளம்பரத்தால் ஈர்க்கப்பட்டு, தானே மாவட்டம் பன்வெல் பகுதியை சேர்ந்த நபர் அவரை தொடர்பு கொண்டார்.அவரை, 'வாட்ஸாப்' வாயிலாக தொடர்பு கொண்ட அந்த இளைஞர் போலியான புகைப்படத்தை அனுப்பி அவரது நம்பிக்கையை பெற்றார்.இதைத் தொடர்ந்து அந்த நபர் பல தவணைகளாக, 1.03 கோடி ரூபாயை கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தார். ஆனால், பணம் செலுத்திய நபருக்கு லாபத்தொகை எதையும் இளைஞர் வழங்கவில்லை. ஏமாற்றப்பட்டதை அறிந்த நபர், போலீசில் புகார் அளித்தார். மோசடியில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் நேற்று கைது செய்தனர்.