ஆன்லைன் மூலம் ரூ.2.25 கோடி மோசடி; ஒருவர் கைது
மூணாறு; இடுக்கி மாவட்டம் குமுளி அருகே சக்கு பள்ளம் பகுதியைச் சேர்ந்தவரிடம் ஆன் லைன் வர்த்தகம் தொடர்பாக ரூ.2.25 கோடி மோசடி செய்தவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.கேரளா, எர்ணாகுளம் மாவட்டம், ஆலுவாவைச் சேர்ந்தவர் பினோய் 44. இவர், சக்குபள்ளம் பகுதியைச் சேர்ந்தவரிடம் ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக லாபம் சம்பதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி பல்வேறு வங்கி கணக்குகள் மூலம் ரூ.2.25 கோடி பெற்று மோசடி செய்தார். இது குறித்து பாதிக்கப்பட்டவர் போலீசில் புகார் அளித்தார்.இடுக்கி எஸ்.பி. விஷ்ணுபிரதீப் உத்தரவுபடி சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் சுரேஷ், எஸ்.ஐ.க்கள் டைட்டஸ்மாத்யூ, அனில்குமார் தலைமையில் போலீசார் பினோயை கைது செய்தனர். இந்த மோசடியில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பதை குறித்து விசாரிக்கின்றனர்.