வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பெட்டியில் இருந்த மத்தவங்க அமைதியா வேடிக்கை மட்டும் பார்த்தங்களா >>
மும்பை: மஹாராஷ்டிராவின் நைகோன் பகுதியை சேர்ந்த 20 வயது பெண், போர்விலியில் இருந்து விரார் நகரில் வரை உள்ளூர் ரயிலில் பயணித்தார். நவம்பர் 4ம் தேதி, ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால், தவறுதலாக மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியில் ஏறினார். இவருக்கு திருமணமாகிவிட்டது.அங்கிருந்த ஜிதேந்திரா ஹிர்முகே என்பவர், அந்த பெண்ணை மானபங்கபடுத்தினார். இதற்கு அந்த இளம்பெண் எதிர்ப்பு தெரிவித்ததுடன் அவரிடம் வாக்குவாதம் செய்தார். நகோன் ரயில் நிலையம் வந்தபோது, அந்த பெண்ணை ரயிலில் இருந்து ஜிதேந்திர ஹிர்முகே, தள்ளிவிட்டார். அவர் இரண்டு பெட்டிகளுக்கு இடையே சிக்கிக் கொண்டார். அவர் எழுவதற்குள் ரயில் கிளம்பியது. இதில், அவரது இடது கையில் எலும்புமுறிவு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஜிதேந்திரா ஹிர்முகேவை கைது செய்தனர்.
பெட்டியில் இருந்த மத்தவங்க அமைதியா வேடிக்கை மட்டும் பார்த்தங்களா >>