மேலும் செய்திகள்
புகையிலை பறிமுதல்
13-Mar-2025
சாந்தினி சவுக்: தடை செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்களை பதுக்கி வைத்து விற்று வந்தவரை போலீசார் கைது செய்தனர். 8.04 லட்ச ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.ஹவுஸ் காசி பகுதியில் தடை செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.குறிப்பிட்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி, தடை செய்யப்பட்ட வெளிநாட்டு பிராண்ட் சிகரெட்டுகளை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக முகமது டேனிஷ், 40, என்பவரை கைது செய்தனர்.கடந்த இரண்டு ஆண்டுகளாக சட்டவிரோத சிகரெட் விற்பனை செய்வதாக அவர் தெரிவித்தார். மீன் வியாபாரமும் கட்டட உள்வடிவமைப்பும் பிரதான தொழிலாக செய்து வரும் டேனிஷ், குறுகிய காலத்தில் பணக்காரனாக வெளிநாட்டு சிகரெட்களை விற்றதாக தெரிவித்தார்.மேலும் விசாரணை நடந்து வருகிறது.
13-Mar-2025