மனைவியின் தலையை வெட்டி ஊர்வலமாக எடுத்துச் சென்றவர் கைது
தர்பங்கா: பீகார் மாநிலத்தில், குடும்பத் தகராறு காரணமாக, மனைவியின் தலையை வெட்டி, ஊர்வலமாக எடுத்துச் சென்றவரை, போலீசார் கைது செய்தனர். பீகார் மாநிலம், தர்பங்கா மாவட்டம், தகானியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஹிரா யாதவ்,30. இவரின் மனைவி ரினாதேவி,25. கணவன் - மனைவி இடையே, அடிக்கடி தகராறு நடப்பது வழக்கம்.கடந்த 5ம் தேதி, இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில், மனைவியின் முடியைப் பிடித்து இழுத்து, யாதவ் சண்டையிட்டார். மனைவியும் தகாத வார்த்தைகளால் திட்டினார். ஆத்திரம் அடைந்த யாதவ், அருகில் இருந்த கத்தியை எடுத்து, மனைவியின் கழுத்தில் ஓங்கி வெட்டினார். துண்டான தலையை எடுத்துக் கொண்டு, வீட்டை விட்டு வெளியேறினார். வெட்டப்பட்ட தலையுடன், ஊர்வலமாகச் சென்ற அவரைப் பற்றி, அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார், ஹிரா யாதவை கைது செய்தனர்.