உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  37 ஆண்டுக்கு முன் மாயமானவர் வாக்காளர் திருத்த பணியால் குடும்பத்துடன் இணைந்தார்

 37 ஆண்டுக்கு முன் மாயமானவர் வாக்காளர் திருத்த பணியால் குடும்பத்துடன் இணைந்தார்

கொல்கட்டா: மேற்கு வங்கத்தில், 37 ஆண்டுகளுக்கு முன் மாயமான நபர், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் உதவியால் மீண்டும் தன் குடும்பத்தினருடன் இணைந்துள்ளார். தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உட்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேங்களில், எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தேர்தல் கமிஷன் மேற்கொண்டுள்ளது. எஸ்.ஐ.ஆர்., பணி இதனால் பலருடைய ஓட்டுரிமை பறிக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இதில் திரிணமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜியும் ஒருவர். இந்நிலையில், மேற்கு வங்கத்தில், 37 ஆண்டுக்கு முன் மாயமான ஒருவர், எஸ்.ஐ.ஆர்., பணியின் வாயிலாக மீண்டும் தன் குடும்பத்துடன் இணைந்து உள்ளார். புருலியா மாவட்டம் கோபாராண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் சக்ரவர்த்தி. இவரின் மூத்த மகன் விவேக், குடும்ப தகராறு காரணமாக, 1988ல் வீட்டைவிட்டு வெளியேறினார். அவரை பல இடங்களில் தேடிய குடும்பத்தினர், போலீசிலும் புகார் அளித்தனர். இருப்பினும், விவேக் இருக்கும் இடம் தெரியாததால் விரக்தியில் உறைந்தனர். இந்நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில், சக்ரவர்த்தியின் இளைய மகனும், விவேக்கின் சகோதரருமான பிரதீப் ஈடுபட்டு வருகிறார். அழைப்பு ஓட்டுச்சாவடி நிலை அலுவலரான இவரின் பெயர் மற்றும் மொபைல் போன் குறித்த விபரங்கள், இவர் பணி மேற்கொள்ளும் பகுதியின் வாக்காளர் கணக்கெடுப்பு படிவத்தில் இடம் பெற்றிருந்தன. இந்த சூழலில், கொல்கட்டாவில் இருந்து பிரதீப்பின் மொபைல் போனுக்கு சமீபத்தில் அழைப்பு ஒன்று வந்தது. எதிர்முனையில் பேசியவர், தன் தந்தையின் ஓட்டுச்சாவடி குறித்த விபரங்களை கேட்டார். அவர் கேட்ட விபரங்களின்படி, எதிர் முனையில் பேசியவர், 37 ஆண்டுக்கு முன் மாயமான தன் சகோதரன் என்பது பிரதீப்புக்கு தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, தன் குடும்பத்தாருடன், விவேக் இணைந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை