மேலும் செய்திகள்
தலைமறைவு குற்றவாளி அக்., 13ல் ஆஜராக உத்தரவு
09-Sep-2025
புதுடில்லி:அர்ஜுன் சவுகான், 30, என்ற நபர், டில்லியின் ஓக்லா இன்டஸ்ட்ரி பகுதியில் நடந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருந்தார். இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு அவர் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்ததால், 2019ல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். சயீத் அன்வர் என்பவரை கொலை செய்த வழக்கில் அவர் தேடப்பட்டு வந்தார். போலீஸ் பிடியில் சிக்காமல் இருக்க உத்தர பிரதேசம் மற்றும் ஹரியானா மாநிலங்களில் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்தார். நீதிமன்ற உத்தரவு படி, அவரை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டன. போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். இந்நிலையில், ஹரியானாவின் பல்லாப்கார் பகுதியில் பதுங்கியிருந்த சவுகானை போலீசார் நேற்று கைது செய்து, டில்லிக்கு அழைத்து வந்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
09-Sep-2025