உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காவிரியில் தமிழகத்துக்கு 31 டிஎம்சி தண்ணீர் திறப்பு: மேலாண்மை ஆணையம் உத்தரவு

காவிரியில் தமிழகத்துக்கு 31 டிஎம்சி தண்ணீர் திறப்பு: மேலாண்மை ஆணையம் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: காவிரியில் தமிழகத்துக்கு 31 .24 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும் என கர்நாடகாவுக்கு காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 41வது கூட்டம் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக நடந்தது. இதில் தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநில அதிகாரிகள் பங்கேற்றனர். ஆணையத்தின் தலைவர் எஸ்.கே. ஹல்ர் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி ஜூலையில் 31.24 டிஎம்சி தண்ணீரை தமிழகத்துக்கு திறந்து விட வேண்டும் என கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டது.ஒகேனக்கல்லில் நீர் வரத்து அதிகரிப்பு!கர்நாடக அணைகளில் இருந்து அதிகப்படியான உபரி நீர் திறப்பால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 70,000 அடியில் இருந்து 78,000 கன அடியாக அதிகரித்துள்ளது. அருவியில் குளிக்கவும், பரிசல் ஓட்டவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

தாமரை மலர்கிறது
ஜூன் 27, 2025 18:53

கர்நாடகாவில் அணை நிரம்பும்போது மட்டும் தான் திறந்துவிட வேண்டும். இல்லையெனில் தண்ணீர் கடலுக்கு சென்று வீணாகிவிடும்.


RG GHM
ஜூன் 27, 2025 17:29

கர்நாடகாவில் அணைகள் நிரம்பி வழிகிறது,நாம் கேட்க வேண்டும் என்ற அவசியம் இல்லை அவர்களே திறந்து விடுவார்கள்.


முக்கிய வீடியோ