மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
32 minutes ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
32 minutes ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
43 minutes ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
44 minutes ago
மாண்டியா: கட்சி மேலிடம் கூறுவதற்கு முன்பே, மாண்டியா தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஸ்டார் சந்துரு என்று, மாண்டியா காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரவிகுமார் காணிகா அறிவித்துள்ளார்.'சர்க்கரை மாவட்டம்' என்று அழைக்கப்படும் மாண்டியா ம.ஜ.த.,வின் கோட்டையாக இருந்தது. கடந்த லோக்சபா தேர்தலின் போது, குமாரசாமி முதல்வராக இருந்தார். மாண்டியாவில் போட்டியிட்ட, அவரது மகன் நிகில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். பா.ஜ., ஆதரவுடன் சுயேச்சையாக போட்டியிட்ட சுமலதா வெற்றி பெற்றார்.முதல்வராக இருந்தும் மகனை தேர்தலில், வெற்றி பெற வைக்க முடியவில்லை என்று குமாரசாமியை, காங்கிரஸ் தலைவர்கள் இன்னமும் கிண்டல் அடித்து வருகின்றனர்.இதனால் காங்கிரசுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வரும் லோக்சபா தேர்தலில், மாண்டியாவில் வெற்றி பெற்று காட்ட வேண்டும் என்று, குமாரசாமி சபதம் எடுத்துள்ளார்.ஆனால் சுயேச்சை எம்.பி., சுமலதா பா.ஜ.,வில் சீட் எதிர்பார்ப்பதால், மாண்டியா சீட் யாருக்கு என்பதில், இன்னும் சஸ்பென்ஸ் உள்ளது. காங்கிரசும் மாண்டியாவில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் உள்ளது.அமைச்சர் செலுவராயசாமியின் மனைவி தனலட்சுமி, முன்னாள் எம்.பி., நடிகை ரம்யா, முன்னாள் முதல்வர் கிருஷ்ணாவின் மகள் சாம்பவி பெயர்கள், காங்கிரஸ் வேட்பாளர்களாக அடிபட்டன.ஆனால் ஒப்பந்ததாரரான ஸ்டார் சந்துருவின் பெயர், கட்சி மேலிடத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.மேலிடம் இன்னும் வேட்பாளர் பெயரை அறிவிக்காத நிலையில், மாண்டியா தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஸ்டார் சந்துரு தான் என்று, மாண்டியா காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரவிகுமார் காணிகா அறிவித்துள்ளார்.ஸ்டார் சந்துருவை தனது தொகுதியில் உள்ள, கிராமங்களுக்கு அழைத்து சென்று பிரசாரம் செய்கிறார். 'இவர் தான் நமது வேட்பாளர்; இவரை வெற்றி பெற வைக்க வேண்டும்' என்று, கிராம மக்களிடம் கூறி வருகிறார்.
32 minutes ago
32 minutes ago
43 minutes ago
44 minutes ago