உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மிஸ் இந்தியா யுனிவர்ஸ் அழகியாக மணிகா தேர்வு!

மிஸ் இந்தியா யுனிவர்ஸ் அழகியாக மணிகா தேர்வு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெய்ப்பூர்:ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மணிகா விஸ்வகர்மா, மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2025 அழகியாக தேர்வு செய்யப்பட்டார். இவர், தாய்லாந்தில் நடக்கும் மிஸ் யுனிவர்ஸ் அழகிப்போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்பார்.ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மிஸ் இந்தியா யுனிவர்ஸ் 2025 அழகிப்போட்டி நடந்தது. இதில் மிஸ் இந்தியாவாக, மணிகா விஸ்வகர்மா தேர்வு செய்யப்பட்டார். ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்கா நகரை சேர்ந்த இவர், தற்போது டில்லியில் வசிக்கிறார்.முதலாவது ரன்னர் அப் ஆக தன்யா சர்மாவும், இரண்டாவது ரன்னர் அப் ஆக ஹரியானாவை சேர்ந்த மேகா திங்ராவும் தேர்வு செய்யப்பட்டனர்.இந்திய அழகியாக தேர்வு செய்யப்பட்ட மணிகா, வரும் நவம்பரில் தாய்லாந்தில் நடக்கும் மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்பார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

mindum vasantham
ஆக 19, 2025 20:42

அழகுக்கான முக்கியத்துவம் குறைய வேண்டும் , அழகு தோல் நிறம் மட்டும் வைத்து கொண்டு வேலை வாய்ப்பில் முன்னிலை படுத்துகின்றனர் , உழைப்பு திறமை உள்ளவர்கள் முன்னிருமை வர வேண்டும்


முக்கிய வீடியோ