உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமைதி, செழிப்பின் அடையாளமாக மணிப்பூரை மாற்றுவோம்: பிரதமர் மோடி உறுதி

அமைதி, செழிப்பின் அடையாளமாக மணிப்பூரை மாற்றுவோம்: பிரதமர் மோடி உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இம்பால்: மணிப்பூரை அமைதி மற்றும் செழிப்பின் அடையாளமாக மாற்ற விரும்புகிறோம் என வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசுகையில் தெரிவித்தார்.வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருகிறது. அவ்வப்போது அசம்பாவிதம் தொடர்ந்த நிலையில், அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி இன்று ( செப்.,13) மணிப்பூர் சென்றார். மணிப்பூரின் சுரசந்த்பூர் செல்லும் பிரதமர் அங்கு ரூ.7, 300 கோடி மதிப்பு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். பின்னர் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: மணிப்பூர் தைரியம் மற்றும் துணிச்சலின் பூமி. மணிப்பூர் மக்களின் ஆர்வத்திற்கு வணக்கம் செலுத்துகிறேன். மணிப்பூர் என்ற பெயரிலேயே ரத்தினம் உள்ளது. இது வரும் காலங்களில் வட கிழக்கு மாநிலங்களில் பொலிவை ஏற்படுத்தும். புதிய திட்டங்கள் மணிப்பூரின் மலைப்பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்களின் வாழ்வை மேம்படுத்தும்.மணிப்பூரின் மலைகள் விலைமதிப்பற்ற பரிசு. இத மக்களின் கடின உழைப்பின் அடையாளமாகவும் உள்ளன. அமைதிக்கான மத்திய அரசின் தொடர்ச்சியான முயற்சிகள் மலைகள் மற்றும் பள்ளத்தாக்கில் வசிக்கும் மக்களிடையே மோதலுக்கு தீர்வு காணும் வகையில் பேச்சுவார்த்தைக்கு வழிவகுத்தன. மணிப்பூரை அமைதி மற்றும் செழிப்பின் அடையாளமாக மாற்ற விரும்புகிறோம். நான் இந்த மாநில மக்களுக்கு ஆதரவாக இருப்பேன். மணிப்பூரின் வளர்ச்சிப் பாதையில் பயணத்தை விரைவுபடுத்த மத்திய அரசு தொடர்ந்து பாடுபட்டு வருகிறது.வளர்ச்சிக்கு அமைதி மிக முக்கியமானது. உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்க அனைத்து அமைப்புகளும் அமைதி பாதையில் செல்ல வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். மணிப்பூரில் ரயில்வே, சாலை இணைப்பு திட்டங்களுக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை மத்திய அரசு அதிகரித்துள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

ரூ.1,200 கோடி திட்டங்கள்

மணிப்பூர் தலைநகர் இம்பாலில் ரூ.1200 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மந்திரிபுக்ரியில் உள்ள சிவில் செயலகம், ஐடி சிறப்பு பொருளாதார மண்டலக் கட்டிடம் மற்றும் மந்திரிபுக்ரியில் உள்ள புதிய காவல் தலைமையகம், டில்லி மற்றும் கோல்கட்டாவில் மணிப்பூர் பவன் கட்டடம், 4 மாவட்டங்களில் பெண்களுக்கான பிரத்யேக சந்தைகள் ஆகியவவை திறக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

ஆரூர் ரங்
செப் 13, 2025 22:05

70 ஆண்டுகளுக்கு மேல் மணிப்பூரில் அமைதியின்மை நிலவுகிறது. UPA ஆட்சியில் 6 மாதங்களுக்கு முன்பு தொடர்ந்து பந்த் நடந்ததுமுண்டு . இப்போது நடந்த கலவரம் கூட இடஒதுக்கீடு பற்றிய கோர்ட் தீர்ப்பின் பின்விளைவே.


நிக்கோல்தாம்சன்
செப் 13, 2025 21:41

அதற்கு ஜார்ஜு சோரஸ் போன்றோரை போட்டு தள்ளிடுங்க யுவர் ஹானர்


V Venkatachalam
செப் 13, 2025 21:10

கலவரத்தை ஏற்படுத்தி அதுக்குள்ள மோடியை அழைத்து வந்து அவமானப்படுத்த கான்+கிராஸ் மற்றும் அதோட சேர்ந்த கொள்ளைக்காரனுங்க பெரிய பிளான் வச்சிருந்தானுங்க. இவனுங்க எப்பேர்பட்ட ஃபிராடுங்கன்னு அவருக்கு நல்லா தெரியும். இவனுங்க பிளான் எல்லாம் புஸ்ஸுன்னு ஆனப்புறம் அவர் என்ன செய்யணுமோ அதை செய்கிறார்.எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத மூடல் ஆட்சின்னு சாராய யாவாரி பேத்திகிட்டு இருக்காரே அப்போ இந்த கையேந்தும் கூட்டம் ஏன் பேசவில்லை?


ஜெய்ஹிந்த்புரம்
செப் 13, 2025 20:56

எத்தனை மணிநேர வருகை? எத்தனை மக்களை நேரில் சந்தித்தீர்கள்? பயம்மா இருந்தது, இல்லே?


KOVAIKARAN
செப் 13, 2025 18:22

மணிப்பூர் கலவரங்களுக்கு முக்கிய காரணங்கள் சர்வதேச போதைக்கடத்தல் தான். அவர்கள் மணிப்போரின் ஒரு சாராரை மூளை சலவை செய்து, மியான்மர் - அன்றையை பர்மா - வழியாக போதை மருந்து வணிகம் செய்தார்கள். அவர்கள் அந்த சாராரை மணிப்பூரில் உள்ள மலைப்பகுதியில் போதை பொருள் உற்பத்தி செய்யவைத்தார்கள். அதிலிருந்து நல்ல வருமானம் அவர்களுக்கு அனைவருக்கும் கிடைத்தது. அந்தப் பகுதிக்கு வேறு யாரையும் அந்த சாரார் அனுமதிப்பதில்லை. இதனால் சிறு இரு கலவரங்கள் அவ்வப்போது நடைபெற்று வந்தன. இதை நமது மத்திய போதை ஒழிப்பு அதிகாரிகள் கண்டறிந்து அதைக் கட்டுப்படுத்துவற்கான வேலைகளை செய்யும்போது அந்த சாரார் போராட்டம் நடத்தினார்கள். அதுவே பின்னாளில் இனக்கலவரமாக மாறி அதிக உயிர்சேதம், பொருள்சேதம் ஆகி மணிப்பூர் ஒரு கலவர பூமி ஆகிவிட்டிருந்தது. அந்த சமயத்தில் பிரதமர் அங்கு போயிருந்தால் அவரை தடுப்பதற்கு இந்த சர்வதேச போதைக் கும்பலும் நமது நாட்டிலுள்ள நமது நாட்டின் நலனுக்கு எதிராக செயல்பட்டு வரும் ஒருசில அரசியல் கட்சிகளும் திட்டமிட்டதை அறிந்த மத்திய உளவுத்துறை பிரதமரை அங்கி செல்ல விடாமல் தடுத்தார்கள். இந்த இரண்டு வருடங்களில், போதை பொருள்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட விட்டாலும், மிக அளவில் குறைக்கப்பட்டுள்ளது. அரசியல் ரீதியாக மியான்மர் அரசை அணுகி, இந்திய மியான்மர் எல்லைகளை பலப்படுத்தி, இப்போது ஓரளவு அமைதி மீண்டும் திரும்பியுள்ளது. எனவே தான், இதுதான் சரியான நேரம் என்று பிரதமர் மோடி அவர்கள் அங்கு சென்றுள்ளார்கள்.


Bala
செப் 13, 2025 18:20

Ippadi pesi pesiyae tamilan saaga thaan poraan


K.n. Dhasarathan
செப் 13, 2025 17:09

தேர்தல் படுத்தும் பாடு அடடே, தேர்தல் வந்ததும் நம்ம பிரதமருக்கு மணிப்பூர் ஞாபகம் வந்து விட்டது, புதிய திட்டங்கள், கட்டடங்கள் , தொழில்கள் என்று தூள் பண்ணுகிறார். இந்த இரண்டு வருடங்களாக இந்தியாவில் தான் இருந்தாரா ? அல்லது வெளி நாட்டில் இருந்தாரா? எட்டி கூட பார்க்க மனம் இல்லை ஒரு உதவியும் கிடையாது , அட, அவர் போக வேணாம், உள்துறையை அனுப்பி பேச்சு வார்த்தைகளை தொடங்கியிருக்கலாமே ஏன் செய்யவில்லை ?இப்போது " மணிப்பூரை மாற்றுவோம் " , நல்ல நாடகம் இந்தியா முழுதும் உள்ள மக்களே உஷார் குறிப்பாக பிஹார், மணிப்பூர் மக்களே உங்களுக்கு அருமையான வாய்ப்பு வருகிறது சந்தர்ப்பவாதிகளை துரத்தி அடியுங்கள், உண்மையான சேவகர்களை அடையாளம் கண்டு அவர்களை கொண்டாடுங்கள், அப்போதான் உண்மையான முன்னேற்றம்


vivek
செப் 13, 2025 17:26

தசரத மாங்காய் கருத்து


ManiK
செப் 13, 2025 16:36

இந்த நேரத்தில் அந்த மக்களிடம் என்ன வேண்டுகோள் வைக்கவேண்டுமோ அதைத்தான் பொருப்புடன் பேசியுள்ளார். மணிப்பூர் பற்றி எரிய வேண்டும்னு நினைப்பவர்களுக்கு வயிறு எரிவதில் ஆச்சரியமில்லை.


Suresh Kuppuswamy
செப் 13, 2025 16:12

இதுக்கு முன்னாடி இருந்த அமைதியை சீர் குலைத்தது யாரு? அதுவும் நாங்க தான்.


Kavi
செப் 13, 2025 16:06

ஆம்மம் நீ ஒரு ஊசி போன வடை


புதிய வீடியோ