உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்; குகி அமைப்பு வலியுறுத்தல்

மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்; குகி அமைப்பு வலியுறுத்தல்

இம்பால்; மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று குகி இனத்தின் கிளை அமைப்பு வலியுறுத்தி உள்ளது.மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங், தமது பதவியை அண்மையில் ராஜினாமா செய்தார். அதற்கான அதிகாரப்பூர்வ கடித்தை கவர்னரிடம் அவர் அளித்தார். அடுத்த முதல்வர் தேர்ந்து எடுக்கப்படாத நிலையில், காபந்து முதல்வராக பிரேன் சிங் நீடிக்கிறார். மணிப்பூரின் புதிய முதல்வர் அறிவிப்பு பற்றிய எந்த வித தகவல்களும் வெளியாகாத நிலையில் அம்மாநிலத்தில் அரசியல் ஸ்திரத்தன்மை நிலவுகிறது. இந் நிலையில் மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று குகி அமைப்பின் கிளை அமைப்பான குகி சோ அமைப்பினர் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் லுன் கிப்ஜன் கூறியதாவது; மணிப்பூரில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்கு பிரேன் சிங் ராஜினாமா என்பது பொறுப்பானதாகவும், தீர்வாகவும் இருக்க முடியாது. அவரின் ராஜினாமா எங்களுக்கு முக்கியம் அல்ல. இங்கு ஜனநாயகத்தை மீண்டும் நிலைநாட்டுவதில் உரிய அக்கறையை மத்திய அரசு இப்போதாவது காட்ட வேண்டும். ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் வலியுறுத்தி உள்ளார். முன்னதாக, மணிப்பூர் சட்டசபை கூட்டத்தொடர் இன்று(பிப்.10) கூட இருந்தது. ஆனால் எதிர்க்கட்சிகள் பிரேன் சிங்குக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர திட்டமிட்டு இருந்த நிலையில், அந்த கூட்டத்தொடரை கவர்னர் ரத்து செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
பிப் 10, 2025 20:34

துணை ஜனாதிபதி ஆட்சி என்று ஏதாவது இருந்தால், அந்த ஆட்சியை தமிழகத்தில் முதலில் அமல்படுத்தவேண்டும். பாலியல் வன்கொடுமைகள் தினம் தினம் அதிகரிப்பு. கொலை, கொள்ளைகள், அதிகரிப்பு. ஊழல் அதிகரிப்பு.


முக்கிய வீடியோ