உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மன்மோகன் சிங் மறைவுக்கு அவரது சொந்த கிராமத்தில் துக்கம் அனுசரிப்பு

மன்மோகன் சிங் மறைவுக்கு அவரது சொந்த கிராமத்தில் துக்கம் அனுசரிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இஸ்லாமாபாத்: மன்மோகன் சிங் மறைவுக்கு, பாகிஸ்தானில் உள்ள அவரது சொந்த கிராமமான, காஹ் பகுதியில் இரங்கல் தெரிவிக்கும் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்பாக, ஒன்றுபட்ட பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ள சக்வால் மாவட்டம், காஹ் கிராமத்தில் மன்மோகன் சிங் பிறந்தார். அவரது தந்தை குர்முக் சிங் ஒரு துணி வியாபாரி மற்றும் அவரது தாயார் அம்ரித் கவுர் ஒரு இல்லத்தரசி. அவரது நண்பர்கள் மன்மோகன் சிங்யை 'மோகனா' என்று அழைத்தனர். அவரது கிராமம் காஹ், தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து தென்மேற்கே 100 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது. இந்த கிராம மக்கள் மன்மோகன் சிங் உயிரிழந்த செய்தி அறிந்து துக்கம் அனுசரித்தனர். மன்மோகன் சிங் மறைவுக்கு, பாகிஸ்தானில் உள்ள அவரது சொந்த கிராமம், காஹ் பகுதியில் இரங்கல் தெரிவிக்கும் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. கூட்டத்திற்கு தலைமை தாங்கிய, மன்மோகன் சிங் படித்த பள்ளியின் ஆசிரியர், அல்தாப் ஹுசைன், 'ஒட்டுமொத்த கிராமமும் துக்கத்தில் உள்ளது. எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் இன்று இறந்துவிட்டதாக நாங்கள் உணர்கிறோம்,' என்றார்.2004ம் ஆண்டு மன்மோகன் சிங் பிரதமராக பதவி ஏற்ற போது அவருடன் படித்த பள்ளி தோழர்கள் சிலர், அந்த கிராமத்தில் வசித்தனர். தற்போது அவர்கள் அனைவருமே இறந்துவிட்டனர். எனினும் அவர்களது குடும்பத்தினர் இணைந்து மன்மோகனுக்கு இரங்கல் நிகழ்ச்சிக்கு நேற்று ஏற்பாடு செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Rasheel
டிச 28, 2024 20:39

பாகிஸ்தானில் இந்துக்களையும் சீக்கியர்களை வேரறுத்து விட்டு இப்போது மூர்க்கம் இரங்கல் கூட்டம் நடத்தி என்ன பிரயோஜனம்?


Barakat Ali
டிச 28, 2024 11:51

இன்னும் அவரு ஊருல இத்தினி வெட்டிங்க இருக்குதுங்களா ??


SIVA ANANDHAN
டிச 28, 2024 11:33

பாகிஸ்தான் மக்களிடம் இருக்கும் அன்பு இலங்கை தமிழர்களிடம் இல்லாமல் போனது ஏன் . தமிழர்களாகவே இருந்தாலும் இந்தியர்கள் மீது அந்தக்காலம் முதலாகவே தீரா வன்மமும் கொண்டு செயல்படுவது ஏன் . பாகிஸ்தானியர்களை பார்த்தாவது திருந்துவார்களா


MARI KUMAR
டிச 28, 2024 10:26

ஆழ்ந்த இரங்கல்