வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பிஜேபி அரசில் அதிசயங்கள் நடப்பது ஒன்றும் அதிசயம் இல்லையே
பாட்னா; பீஹாரில் நக்சல் கட்டுப்பாட்டில் இருந்த கிராமத்தின் மக்கள் மத்திய அரசின் நடவடிக்கையால் 25 ஆண்டுகளுக்கு பிறகு இன்று (நவ.11) ஓட்டளிக்கின்றனர். பீஹார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களில் நக்சல்கள் ஆதிக்கம் பல பகுதிகளில் நிரம்பி இருக்கும். நக்சல் குழுக்களை ஒழிக்க, மத்திய அரசு தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், பீஹாரில் இன்று (நவ.11) 2ம் கட்ட தேர்தல் நடக்கும் ஜமுய் மாவட்டத்தில் உள்ள சின்னஞ்சிறிய கிராமமான சோர்மாரா (Chormara)வில் வசிக்கும் வாக்காளர்கள் 25 ஆண்டுகள் கழித்து முதல்முறையாக ஓட்டுப் போடுகின்றனர். இத்தனை ஆண்டு காலமாக அங்கு ஆதிக்கத்தில் இருந்த நக்சல்கள் முற்றிலும் ஒழிக்கப்பட்டதே இதற்கு முக்கிய காரணம் ஆகும். சோர்மாரா கிராம மக்கள் ஓட்டுப்போட 22 கிமீ தொலைவில் உள்ள அரசு பள்ளிக்கு தான் வர வேண்டும். காரணம், அவர்களுக்கு இங்கு தான் ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டது. ஒவ்வொரு முறையும் தேர்தலின் போது நக்சல்கள் ஓட்டுப்பெட்டிகளை கைப்பற்றுவது, வாக்காளர்களை ஓட்டுச்சாவடி பக்கமே வரவிடாமல் செய்வது போன்ற செயல்களால் மக்கள் வாக்களிக்க வருவதே இல்லை. இப்போது நிலைமை மாறி, நாளை நீண்ட ஆண்டுகள் கழித்து ஓட்டுப் போட உள்ளனர்.அவர்களுக்காகவே சோர்மாராவில் உள்ள ஆரம்பப்பள்ளி ஓட்டுச் சாவடியாக (ஓட்டுச்சாவடி எண் 220) தற்போது மாற்றப்பட்டு உள்ளது. இங்கு தான் வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற இருக்கின்றனர். இதே பள்ளி தான் முன்பொருமுறை நக்சல்களின் குண்டு வீச்சுக்கு இரையாகி சேதமானது. இன்று மத்திய அரசின் நக்சல் ஒழிப்பு நடவடிக்கையின் பலனாக அங்கே ஓட்டு போட இருக்கின்றனர்.இதுகுறித்து சோர்மாரா பகுதியைச் சேர்ந்த சஞ்சய் கோடா கூறுகையில், என் தந்தை பெயர் பலேஸ்வர் கோடா. நக்சல் தலைவராக இருந்தவர். கிராமத்தில் நிறைய பயங்கரவாத சம்பவங்கள் நடந்தன. எனது தந்தையை கண்டால் இங்குள்ளோருக்கு பயம். ஏன் நானும் கூட மிகவும் பயந்து தான் இருந்தேன். யார் எப்போது கொல்லப்படுவார்கள் என்பது யாருக்குமே தெரியாது. அப்படி ஒரு சூழலில் தான் வாழ்ந்தோம்.ஆனால் இப்போது அப்படியில்லை. இன்று நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். தேர்தலுக்காக நானே ஓட்டுச்சாவடியை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார். சஞ்சய் கோடாவின் மனைவி கூறுகையில், ' என் மாமனார் ஒரு நக்சல் கமாண்டர். பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு மத்தியில் தான் நாங்கள் வாழ்ந்தோம். மாமனார் பலேஸ்வர் கோடா சரண்டர் ஆகி, தற்போது சிறைவாசம் அனுபவித்து வருகிறார். நாங்கள் நாளை ஓட்டுப்போட போகிறோம். இது எங்களுக்கு ஒரு திருவிழா போன்று இருக்கிறது. போலீசாரும் பல வழிகளில் எங்களை துன்புறுத்தி உள்ளனர். மாற்றம் வரவே வராது என்று எண்ணியிருந்தோம். ஆனால் அந்த மாற்றம் இப்போது நிகழ்ந்து இருக்கிறது. நான் எனது குழந்தைகளுடன் நாளை ஓட்டு போட உள்ளேன்' என்றார். எந்த ஆரம்பப் பள்ளி ஓட்டுச்சாவடியாக அமைக்கப்பட்டு உள்ளதோ அதே பள்ளியில் இவர் ஆசிரியராக பணியாற்றுகிறார். நக்சல் இல்லாத நாடாக இந்தியாவை மாற்றுவதே இலக்கு என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறி வருகிறார். அவரின் பேச்சை மெய்பிக்கும் விதமாக, சின்னஞ்சிறிய கிராமமான சோர்மாரா திகழ்கிறது என்றால் மிகையில்லை.
பிஜேபி அரசில் அதிசயங்கள் நடப்பது ஒன்றும் அதிசயம் இல்லையே