உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மும்பை தெருக்களை காலி செய்ய வேண்டும்: இட ஒதுக்கீடு கோரும் போராட்டக்காரர்களுக்கு ஐகோர்ட் கண்டிப்பு

மும்பை தெருக்களை காலி செய்ய வேண்டும்: இட ஒதுக்கீடு கோரும் போராட்டக்காரர்களுக்கு ஐகோர்ட் கண்டிப்பு

மும்பை: மராத்தா இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்தி வரும் மனோஜ் ஜராங்கேயின் ஆதரவாளர்கள், மும்பை தெருக்களை நாளைக்குள்( செப்.,02) காலி செய்ய வேண்டும் என மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டுஉள்ளது. இந்த போராட்டம் அமைதியாக நடக்கவில்லை. அனைத்து விதிமுறைகளும் மீறப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளது.மஹாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தினர், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக சமூக ஆர்வலர் மனோஜ் ஜராங்கே பாட்டீல் பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்து நடத்தினார்.

தடை

மராத்தா சமூகத்தினர் அனைவரையும் ஓ.பி.சி., எனப்படும், இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து, அவர்களுக்கு குன்பி ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு தர வேண்டும் என்றும் மஹா., அரசை அவர் வலியுறுத்தி வந்தார். இதையடுத்து, 2018ல், மராத்தா சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 16 சதவீத இடஒதுக்கீடு வழங்க சட்டம் நிறைவேற்றப்பட்டது.இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அந்த சட்டத்துக்கு தடை விதித்தது. இதனால், அதை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.இந்நிலையில், இடஒதுக்கீடு பிரச்னையை மீண்டும் கையில் எடுத்த மராத்தா இடஒதுக்கீடு இயக்கத் தலைவரும், சமூக ஆர்வலருமான மனோஜ் ஜராங்கே, மும்பையில் ஆக.,29 அன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தார். அவருக்கு காலை 9:00 முதல் 6:00 மணி வரை போராட்டம் நடத்த போலீசார் அனுமதி அளித்திருந்தனர்.

உண்ணாவிரதம்

திட்டமிட்டபடி, ஆசாத் மைதானத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தை துவங்கிய ஜராங்கே, அதை முடிக்காமல் தொடர்ந்தார். மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் வரை போராட்டத்தை தொடரப் போவதாக அறிவித்தார்.இதனையடுத்து அந்தப் பகுதியில் அவரது ஆதரவாளர்கள் கூடியுள்ளனர். ரயில் நிலையங்கள் முன்பும் திரண்டுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்களை மாற்றுப்பாதையில் செல்லும்படி போலீசார் அறிவுறுத்தி இருந்தனர். பல ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.இதனிடையே, மராத்தியர்களின் கோரிக்கையை மாநில அரசு செவி கொடுத்து கேட்காவிட்டால், 5 கோடி பேர் தலைநகரை நோக்கி வருவார்கள் என எச்சரித்து இருந்தார்.இந்நிலையில், இந்த போராட்டத்துக்கு எதிரான வழக்கை மும்பை ஐகோர்ட் விசாரித்தது. அப்போது, இந்த போராட்டம் அமைதியாக நடக்கவில்லை. அனைத்து விதிமுறைகளும் மீறப்பட்டு உள்ளன. இதனை சரி செய்ய வேண்டும் எனக்கூறியதுடன் ஆசாத் மைதானம் பகுதியை தவிர்த்து மும்பை தெருக்களில் இருந்து அனைவரும் வெளியேற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

VenuKopal, S
செப் 02, 2025 08:52

140 கோடி பேருக்கு 4 கோடி மக்களின் வரிப்பணம் வீணாக கடலில் கலக்கிறது...அட்டை பூச்சிகளை விட கொடிய ஜந்துக்களை நசுக்கி பொசுக்க வேண்டும்


Tamilan
செப் 01, 2025 22:19

ஜனநாயகத்தை ஒலித்துக்காட்டும் சர்வாதிகாரத்தின் பிரதிபலிப்பு


Ganapathy
செப் 01, 2025 22:00

பாஜாகா ஆட்சில பொருளாதாரத்தில் எங்கெல்லாம் முன்னேற்றம் நடக்கிறதோ அங்கெல்லாம் சோரம்போன சோரஸ் இடதுசாரி டூல்கிட் ஆளுங்க இப்படியான கேனத்தனமான போராட்டங்களை செய்து அமைதியைக் குலைத்து வரும் தொழில் முதலீடுகளை தடுக்க முயல்கின்றன. பொது இடங்களில் இவர்கள் வேண்டுமென்றே சிறுநீர் கழிப்பது குப்பைகளை போடுவதும் பெண்களையும் சுற்றுலா பயணிகளையும் தொந்தரவு செய்வது ரோடுகளில் கண்டபடி ஓடுவது வாகன ஓட்டிகளை மிரட்டுவது என பல அசிங்கமான விஷயங்களில் இந்த கும்பல் ஈடுபடுவதை நேரில் கண்டேன். இப்படியான செய்கைகளை செய்து உலக தொழில் சமூகத்தை இங்கு முதலீடு செய்வதிலிருந்து தடுகின்றனர்.


GMM
செப் 01, 2025 19:55

இட ஒதுக்கீடு காங்கிரஸ், திராவிட இயக்கம் கொண்டுவந்த அரசியல் சூழ்ச்சி. இதில் உள்ள நுட்பமான பிரித்தாளும் சூழ்ச்சியில் நீதிமன்றம் சிக்கி வருகிறது. சாதி இட பெயர்வு, உள் ஒதுக்கீடு போன்ற குளறுபடிகள் எந்த தரவும் இல்லாமல் வகுக்க பட்டவை. 10 ஆண்டு கால சாதி இட ஒதுக்கீடு மாநில கட்சிகள் வாக்கு வங்கி உருவாக்க சாதி குழுக்கள் ஏற்படுத்தி, சட்டங்களால் 100 நோக்கி பயணிக்கிறது. பயன் பாதிப்பு புள்ளி விவரம் பெற்று நீதிபதி தீர்வு காண விரும்பவில்லை. மாநில சட்ட பேரவை ஏதோ ஒரு மகாசபை போல் தீர்மானித்து நீதி வழங்கி வந்தது. தேச ஒற்றுமையை சிதைக்க இட ஒதுக்கீடு ஒரு கருவியாக மாறி வருகிறது.


தத்வமசி
செப் 01, 2025 19:44

இவர் உண்ணாவிரதம் இருக்கிறார். அரசு செவி சாய்க்கவில்லை என்றால் ஐந்து லட்சம் பேர் திரளுவார்கள் என்று கூறுகிறார். எங்கிருந்து எப்படி கூடுவார்கள் ? பின்னணியில் யார் இருக்கிறார்கள் ? அரசில் எத்தனை வேலை வாய்ப்புகளை உருவாக்க இயலும் ? மக்கள் தொகை பெருகப் பெருக செலவினங்கள் கூடிக் கொண்டே போகிறது. ஒரு பக்கம் வரி கட்டுபவர்களின் எண்ணிக்கை அவ்வளவு அதிகமாக இல்லை. அரசுக்கு எங்கிருந்து பணம் வரும் ? தமிழகத்தில் எடுத்துக் கொள்ளுங்களேன். அரசு வேலை எவ்வளவு பேருக்கு கொடுக்க இயலும் ? தற்காலிக வேலை தான் கொடுத்து வருகின்றனர். தொகுப்பு ஊதியம் வழங்கப் படுகிறது. கஜானாவில் காசு எங்கே ? இலவசம் வேண்டும், வேலை வாய்ப்பும் வேண்டும் என்றால் அரசிடம் பணம் எங்கிருந்து வரும் ?


ஜெய்ஹிந்த்புரம்
செப் 01, 2025 20:12

தேர்தல் ஆணையம் அந்த ஐந்து லட்சம் பேரையும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்து விடும், சத்தமில்லாமல்


சமீபத்திய செய்தி