உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒயிட்பீல்டு குடியிருப்பில் 16ல் மாரத்தான் ஓட்டம்

ஒயிட்பீல்டு குடியிருப்பில் 16ல் மாரத்தான் ஓட்டம்

ஒயிட்பீல்டு: பின்தங்கிய மாணவர்களின் கல்வி நிதிக்காக, ஒயிட்பீல்டு பிரஸ்டீஜ் சாந்தி நிகேதன் அடுக்குமாடி குடியிருப்பில், ஈக்வல் ஸ்கை மற்றும் ரன்னிங் நிஞ்சாஸ் இணைந்து 7வது 'பி.எஸ்.என்., ரன் பார் ஏ காஸ்' மாரத்தான் ஓட்டப்பந்தயம் வரும் 16ல் நடத்துகிறது.பெங்களூரு ஒயிட்பீல்டில் 70 ஏக்கரில் பிரஸ்டீஜ் சாந்தி நிகேதன் அடுக்குமாடி குடியிருப்பு அமைந்து உள்ளது.இங்குள்ள குடியிருப்பு வாசிகளின் 'ஈக்வல் ஸ்கை' என்ற தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் ஆண்டுதோறும் நுாற்றுக்கும் அதிகமான பின் தங்கிய மாணவர்களின் கல்விக்காக நிதி திரட்ட, 'பி.எஸ்.என்., ரன் பார் ஏ காஸ்' என்ற பெயரில் மாரத்தான் போட்டி நடத்தி வருகிறது.இந்தாண்டும் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 'ரன்னிங் நிஞ்சாஸ்' சங்கத்தினருடன் இணைந்து, வரும் 16ம் தேதி காலை 6:15 மணிக்கு மாரத்தான் ஓட்டப்பந்தயம், குடியிருப்பு வளாகத்திலேயே நடக்கிறது. இந்த வளாகத்தை ஒரு சுற்று சுற்றி வந்தால், 2.5 கி.மீ., ஆகும்.இதில், 5 கி.மீ., 10 கி.மீ., ஓட்டப்பந்தயத்திற்கு வயது வரம்பில்லை; 2.5 கி.மீ., துார போட்டியில், 20 முதல் 60 வயதுக்கு உட்பட்டோரும்; 19 வயதுக்கு உட்பட்டோரும் என இரு பிரிவாகவும்; 2 கி.மீ., துார போட்டியில் 60 வயதுக்கு மேற்பட்டோரும்; ஒரு கி.மீ., துார போட்டியில் 6 முதல் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளும்; 500 மீட்டர் போட்டியில், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பங்கேற்கலாம்.மேலும் விபரங்களுக்கு 99722 02600, 96111 10959, 97420 44545 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி