உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 4 நாளில் திருமணம்... போலீசார் கண்முன்னே மகளை சுட்டுக்கொன்ற தந்தை; ம.பி.,யில் அதிர்ச்சி

4 நாளில் திருமணம்... போலீசார் கண்முன்னே மகளை சுட்டுக்கொன்ற தந்தை; ம.பி.,யில் அதிர்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

குவாலியர்: திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த மகளை போலீசாரின் கண் முன்னே தந்தை சுட்டுக்கொன்ற சம்பவம் மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குவாலியர் அருகே கோல்கா மந்திர் பகுதியைச் சேர்ந்த மகேஷ் குஜார். இவருக்கு தனு குஜார்,20, என்ற மகள் இருந்தார். இவரும், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த இளைஞரும் 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=jwi2w086&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இவர்களின் காதலுக்கு தனுவின் குடும்பத்தினர் முதலில் சம்மதம் தெரிவித்த நிலையில், பிறகு மறுப்பு தெரிவித்துள்ளனர். அதுமட்டுமில்லாமல், தனுவுக்கு உறவினர் ஒருவருடன் ஜன.,18ம் தேதி திருமணத்திற்கும் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த தனுவை அவரது தந்தை மகேஷ் அடித்து கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் வேதனை தாங்க முடியாத தனு, தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், 'என்னுடைய விருப்பமில்லாமல் கட்டாய திருமணத்திற்கு என்னுடைய தந்தை மகேஷ் ஏற்பாடு செய்துள்ளார். இந்த திருமணத்தில் எனக்கு சம்மதம் இல்லை. எனவே, என்னை கொன்று விடுவேன் என்று என்னுடை தந்தை மிரட்டி வருகிறார். என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், என்னுடைய தந்தையும், குடும்பத்தினரும் தான் பொறுப்பு,' எனக் கூறியிருந்தார். வீடியோ வைரலான நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அம்மாவட்ட பஞ்சாயத்தினர் முன் தனுவை வைத்து போலீசார் விசாரித்துக் கொண்டிருந்தனர். அப்போது, நாட்டு துப்பாக்கியால் மகேஷ் தனது மகள் தனுவை சுட்டுள்ளார். அவரோடு, உறவினரான ராகுலும் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் பலத்த காயமடைந்த தனு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதைத் தொடர்ந்து, மகேஷை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய ராகுலை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

KARTHIKEYAN
ஜன 18, 2025 19:59

parrents take correct decision.


BalaG
ஜன 15, 2025 23:48

அந்த முட்டாளை மன நல காப்பகத்தில் 20 வருடம் சிகிச்சை கொடுத்து அதன் பிறகு அவனை தூக்கில் போடவேண்டும்


Karthik
ஜன 15, 2025 22:44

This is Puppy love, also known as a CRUSH, is an informal term for feelings of romantic love, often felt during childhood and early adolescence. It is an infatuation usually developed by someones looks and attractiveness at First Sight. இது பற்றிய சரியான புரிதலோ , போதுமான விழிப்புணர்வோ பொதுமக்களிடம் இல்லாததே இதுபோன்ற சம்பவத்திற்கு காரணம்.


Sudha
ஜன 15, 2025 21:44

அண்ணே, அரசு பிஜேபி தான், இந்த அப்பன் என்ன கட்சி என்ப ஜாதி என்பதற்கு இன்னும் விவரங்கள் தேவை. அப்படி பார்த்தால் நமது மதிப்பிற்குரிய சூரிய குலத்தோன்றல் இந்நேரம்


Ganesun Iyer
ஜன 15, 2025 20:37

வயது 20, 6 ஆண்டுகளாக காதல் அப்ப 14 வயதிலேயே ஆரம்பமா?..


Thamizhan
ஜன 15, 2025 20:26

திராவிட மாடல் ஆட்சி ....


Ramesh Sargam
ஜன 15, 2025 20:19

இந்தியாவில் பரவும் துப்பாக்கி கலாச்சாரம் மிகவும் வருத்தமளிக்கிறது. அது எப்படி அவ்வளவு ஈசியாக துப்பாக்கி நம்நாட்டில் கிடைக்கிறது? அமெரிக்காவில்தான் இந்த பிரச்சினை, ஒரு தீர்க்க முடியாத பிரச்சினை என்று பார்த்தால், இந்தியாவிலும் கூடவா...? மத்திய அரசு இந்த பிரச்சினையை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும். இல்லையென்றால்.... அமெரிக்கா கதிதான்?


SS
ஜன 15, 2025 19:17

ஆணவக்கொலை.


Mario
ஜன 15, 2025 18:59

பிஜேபி அரசு


Mohammad ali
ஜன 15, 2025 21:15

பிஜேபி க்கு என்னடா சம்பந்தம் 200 உபி


சம்பா
ஜன 15, 2025 18:42

போலிசின் கவனக் குறைவு


முக்கிய வீடியோ