உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாநகர சாலை பராமரிப்பில் சுணக்கம் கமிஷனரிடம் அறிக்கை கேட்கிறார் மேயர்

மாநகர சாலை பராமரிப்பில் சுணக்கம் கமிஷனரிடம் அறிக்கை கேட்கிறார் மேயர்

புதுடில்லி:சாலை பராமரிப்பு மற்றும் கட்டுமானம் குறித்து இரண்டு நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க மாநகராட்சி கமிஷனர் அஷ்வனி குமாருக்கு, மேயர் ஷெல்லி ஓபராய் உத்தரவிட்டுள்ளார்.மேயர் ஷெல்லி ஓபராய், மாநகராட்சி கமிஷனர் அஷ்வனி குமாருக்கு நேற்று அனுப்பியுள்ள கடிதம்:மாநகர் முழுதும் சேதமடைந்த சாலைகளால் எழும்பும் தூசியால் காற்று மாசு அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது. மாநகராட்சியில் பெரும்பாலான சாலைகள் பழுதடைந்துள்ளது. இது டில்லி மக்களின் பயணத்துக்கு மிகவும் இடையூறாக இருப்பது மட்டுமின்றி, விபத்துக்கள் அதிகரிக்கவும் காரணமாக அமைந்துள்ளது.தலைநகர் டில்லியில் மாநகராட்சியின் சாலைகள் பராமரிப்பு இல்லாமல் இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. சாலை பராமரிப்பில் தாமதம் ஏற்பட்டால், காற்றில் மாசு அளவு அதிகரிக்கும் அபாயம் உள்ளது.இந்த நிதியாண்டில் சாலை பராமரிப்புக்காக 1,000 கோடி ரூபாயும், மேயர் விருப்ப நிதியில் இருந்து 500 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி இதுவரை எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை இரண்டு நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். தாமதத்துக்கு ஏதேனும் காரணங்கள் இருந்தால் தெரிவிக்க வேண்டும். விரிவான அறிக்கையை நாளை மாலை 5:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை