உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மருத்துவ பரிசோதனை!

மருத்துவ பரிசோதனை!

எம்.பி.,க்கள் அனைவரும், தங்கள் தொகுதியில் உள்ள மக்கள் ஆண்டுதோறும் மருத்துவப் பரிசோதனை செய்கின்றனரா என்பதை உறுதி செய்ய வேண்டும். நாட்டு மக்களின் ஆரோக்கியத்திற்காக, ஏராளமான திட்டங்களை பிரதமர் மோடி அரசு செயல்படுத்தி உள்ளது.நட்டாமத்திய சுகாதார அமைச்சர், பா.ஜ., நியாயமற்ற தகுதி முறை!நம் நாட்டின் தகுதி முறை முற்றிலும் குறைபாடுடையது; நியாயமற்றது. இதில், உயர் ஜாதியினர் ஆதிக்கம் செலுத்துகின்றனர். சமூகங்களிடையே வேரூன்றிய ஏற்றத்தாழ்வுகளை கண்டறிந்து நிவர்த்தி செய்ய, ஜாதிவாரி கணக்கெடுப்பு மிகவும் முக்கியம்.ராகுல்லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், காங்.,ராகுல் தகுதியற்றவர்!நல்ல அரசியல் முடிவுகளை எடுக்க ராகுல் தகுதியற்றவர். அதனால் தான் அவர் தாஜா அரசியலில் ஈடுபடுகிறார். அரசியல் ரீதியாக எதையும் சாதிக்க முடியாது என்பது, ராகுலுக்கு நன்றாக தெரியும். இன்னும் எத்தனை நாளைக்கு தான், அவர் மக்களை ஏமாற்றப் போகிறார்?சம்பித் பத்ராசெய்தி தொடர்பாளர், பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி