உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இளையராஜாவுக்கு புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி!

இளையராஜாவுக்கு புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பிரதமர் மோடியை டில்லியில் சந்தித்தது மறக்கமுடியாதது என்று இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார். 'இளையராஜா சிம்பொனி இசைத்து, புதிய சரித்திரம் படைத்துள்ளார்' என்று மோடி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=i9mokg26&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சமீபத்தில் லண்டனில் மேற்கத்திய சிம்பொனி இசை அரங்கேற்றம் நடந்தது. இதை செய்த முதல் இந்தியர் என்ற சாதனையை இளையராஜா பெற்றிருந்தார். இந்நிலையில் டில்லியில் பிரதமர் மோடியை இளையராஜா சந்தித்தார். அவரிடம், சிம்பொனி இசைத்தது பற்றி பிரதமர் மோடி ஆர்வத்துடன் விசாரித்தார். இது குறித்து இளையராஜா வெளியிட்டுள்ள அறிக்கை: பிரதமர் மோடி உடனான சந்திப்பு மறக்க முடியாதது. அவருடன் பேசியபோது, சிம்பொனி வேலியண்ட் உள்ளிட்ட பல கருத்துக்கள் குறித்து பேசினோம். அவருடைய அன்பும், ஆதரவுக்கும் நான் தலை வணங்குகிறேன். இவ்வாறு இளையராஜா கூறி உள்ளார்.மோடி புகழாரம்சந்திப்பு குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:ராஜ்யசபா உறுப்பினரான இசை மேதை இளையராஜாவை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். நமது இசை மற்றும் கலாசாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர்.லண்டனில் சில நாட்களுக்கு முன், 'வாலியன்ட்' என்ற பெயரில் மேற்கத்திய சிம்பொனியை இசைத்து சரித்திரம் படைத்துள்ளார். உலகப்புகழ் பெற்ற ராயல் பிலார்மோனிக் இசைக்குழுவினருடன் இணைந்து இந்த சாதனையை படைத்துள்ளார். அவரது ஈடு இணையற்ற இசைப்பயணத்தில் இது ஒரு பெருமைக்குரிய அத்தியாயம்.இவ்வாறு மோடி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

T.Senthilsigamani
மார் 18, 2025 20:31

இளையராஜாவுக்கு புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி மிக நல்ல செய்தி . சிம்பொனி இசையை இசைத்து உலகுக்கு தமிழரின் பெருமையை உணர்த்தியவர் இளையராஜா.அவரின் என்றும் இனிமை குன்றாத 80s பாடல்கள் மூலமாக ,முடிவற்ற ஆனந்த நிலையில் மனதை லயிக்க செய்பவர். ஆம் இசை ஞானம் மூலம் மனம் ஒன்றிய பரவச நிலையை ,பாமரனும் அடைந்திட வித்திட்டவர் இளையராஜாதான். ஆம் இசை யோகம் தந்த அககுருவை போற்றுவோம் .இசை யோகி இளையராஜாவின் புகழ் யுகங்கள் தாண்டியும் நிலைத்திட இறைவன் அருள் புரியட்டும் - என்றும் இளையராஜாவின் ரசிகன் என்ற பெருமிதம் ஒன்றே போதும் - வாழும் கணங்கள் யாவும் தித்திப்புடன் மகிழ்ச்சியில் திளைத்திட .


மணி
மார் 18, 2025 19:01

இவர் சிக்க மாட்டார் வேற வேல ய பாக்கலாம்


raja
மார் 18, 2025 18:26

இந்திய இசையின் தலை மகன். வாழ்க பல்லாலாண்டுஓங்குக அவர் புகழ்


surya krishna
மார் 18, 2025 18:10

both are geniuses in different fields


veeramani hariharan
மார் 18, 2025 17:32

Thats Mr. Narendra Modi ji Our PM


KavikumarRam
மார் 18, 2025 17:24

இப்போ திராவிட சனாதன எதிரி தத்திங்களுக்கு எரியுமே : : : முக்கியமா கிறிஸ்தவ சின்ன தத்திக்கு உடம்பு பூராவும் எரியுமே .


Anu Sekhar
மார் 18, 2025 17:22

நல்ல மனிதர்களை சந்திப்பது மகிழ்ச்சியை தரும்.


sridhar
மார் 18, 2025 17:19

ஸ்டாலினோடு சந்திப்பு பற்றி ரொம்ப comment பண்ணல .


சமீபத்திய செய்தி