உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாடு முழுவதும் 259 இடங்களில் போர்க்கால ஒத்திகை; முழு லிஸ்ட் இதோ!

நாடு முழுவதும் 259 இடங்களில் போர்க்கால ஒத்திகை; முழு லிஸ்ட் இதோ!

புதுடில்லி: நாடு முழுவதும் நாளை 259 இடங்களில் போர்க்கால ஒத்திகை நடைபெற உள்ளது.நாடு முழுவதும் நாளை போர் ஒத்திகை நடத்தும்படி, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்போதைய சூழலில் நாட்டில் 259 இடங்களில் போர் ஒத்திகை நடைபெற உள்ளது. அதன் விபரம் பின்வருமாறு:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=96q893l7&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நாடு முழுவதும் நாளை டில்லி, மும்பை, சென்னை உட்பட 259 இடங்களில் போர்க்கால ஒத்திகை நடைபெற உள்ளது. நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை நடக்கும் இடங்களின் எண்ணிக்கை மாநில வாரியாக பின்வருமாறு:* ஆந்திர பிரதேசம்- 2 இடங்கள்,* அருணாச்சல பிரதேசம்- 5 இடங்கள்,* அசாம்- 20 இடங்கள்* பீஹார்- 5 இடங்கள்*சண்டிகர்- 1 இடம்* சத்தீஸ்கர்- 1 இடம்* டில்லி- 1 இடம்* கோவா- 2 இடங்கள்*குஜராத்- 18 இடங்கள்*ஹரியானா-11 இடங்கள்*ஹிமாச்சல பிரதேசம்- 1 இடம்* ஜம்மு காஷ்மீர்- 19 இடங்கள்* ஜார்க்கண்ட் - 6 இடங்கள்* கர்நாடகா - 3 இடங்கள்* கேரளா- 2 இடங்கள்*லட்சத்தீவு- 1 இடம்*மத்திய பிரதேசம்- 5 இடங்கள்* மஹாராஷ்டிரா- 16 இடங்கள்*மணிப்பூர்- 5 இடங்கள்*மேகலாயா- 3 இடங்கள்*மிசோரம்- 1 இடம்* நாகலாந்து- 10 இடங்கள்* ஒடிசா- 12 இடங்கள்* புதுச்சேரி- 1 இடம்* பஞ்சாப்- 20 இடங்கள்*ராஜஸ்தான்- 28 இடங்கள்* சிக்கிம்- 1 இடம்* திரிபுரா- 1இடம்* உத்தரபிரதேசம்- 19 இடங்கள்* உத்தரகண்ட்- 1 இடம்* மேற்குவங்கம்- 31 இடங்கள்* அந்தமான் நிக்கோபர்- 1 இடம்

தமிழகத்தில்....!

தமிழகத்தில் 4 இடங்களில் போர்க்கால ஒத்திகை நடக்க உள்ளது. கல்பாக்கம், மீனம்பாக்கம், ஆவடி, மணலி ஆகிய 4 இடங்களை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது.இதற்கு முன்பு, 1971ம் ஆண்டு போர் ஒத்திகை பாதுகாப்பு நடந்தது. தற்போது 54 ஆண்டுகள் கழித்து போர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Ramesh Sargam
மே 06, 2025 21:14

இந்த நேரத்திலாவது ஒன்றுக்கும் உதவாத எல்லா அரசியல் தலைவர்களும் மக்களுக்கு ஆதரவாக இருந்து, நம் இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக இருந்து, குறிப்பாக மத்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராக எடுக்கும் எல்லா முயற்சிகளுக்கும் ஆதரவாக இருந்து ஒரு முறையாவது நாட்டுக்கு சேவை செய்யவேண்டும்.


Karthik
மே 06, 2025 19:10

நாளை நடக்க உள்ள போர்க்கால ஒத்திகையை ராணுவம் அல்லாத சிவிலியன்ஸ்கள் சிறப்பாக பயின்று மற்ற சிவிலியன்ஸ்களுக்கும் பயிற்றுவிக்க வேண்டும். ஜெய் ஹிந்த்..


நல்லதை நினைப்பேன்
மே 06, 2025 18:21

உள்நாட்டில் உள்ள தேசத்துரோகிகளை இனம் கண்டு அவர்களை முதலில் காலி செய்ய வேண்டும். இவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்.


தர்மராஜ் தங்கரத்தினம்
மே 06, 2025 18:12

இதைத் தேடவும்..... Security Drills To Be Held At 244 Locations As India-Pakistan Tensions Spiral | Full List..... வடவிந்திய தொலைக்காட்சிகளில் முழு விபரம் அறியலாம் ..... தமிழக தொலைக்காட்சிகள் குழப்புகிறார்கள் ....


தர்மராஜ் தங்கரத்தினம்
மே 06, 2025 17:48

நேருமாமாவால் வந்த பிரச்னை இந்த அளவுக்குக் கொண்டு விட்டது .... இனி காஷ்மீர் அவர்களது நினைவுக்கே வரக்கூடாது .....


M R Radha
மே 06, 2025 17:24

பாகிஸ்தானிய தீவிரவாதிகளையும் ராணுவ தலைமையையும் பிய்த்து எறியுங்க கலகத்துக்கு பின்தான் அமைதி.


Gnana Subramani
மே 06, 2025 17:21

மே 4 அன்று இஸ்ரேல் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்தப் பட்டது. மே 5 அன்று 20 இஸ்ரேலிய விமானங்கள் ஹவுத்தி போராளிகள் மீது குண்டு மழை பொழிந்தன. நம்மூரில் சினிமா ரிலீஸ் மாதிரி டெய்லி அப்டேட்ஸ் மட்டும் தான் வருகிறது


Gnana Subramani
மே 06, 2025 16:32

எல்லை மாநிலங்களை விட பாகிஸ்தானில் இருந்து தொலைவில் இருக்கும் மேற்கு வங்கத்தில் அதிக இடங்களில் போர் ஒத்திகை


தேச நேசன்
மே 06, 2025 16:24

நமது ராணுவத்திற்கு வாழ்த்துக்கள்.


என்றும் இந்தியன்
மே 06, 2025 16:23

மேற்குவங்கம்- 31 இடங்கள் ராஜஸ்தான்- 28 இடங்கள் ஏன் ஏன் ஏன் ???காரண காரியமில்லாமல் இந்த முடிவு எடுக்கப்படவில்லை???இது நிச்சயம்


Gnana Subramani
மே 06, 2025 17:20

,மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு தேர்தல். அது தான் காரணம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை