உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கடன் மோசடி செய்த மெஹூல் சோக்சி பெல்ஜியத்தில் தஞ்சம்; நாடு கடத்த இந்தியா தீவிரம்

கடன் மோசடி செய்த மெஹூல் சோக்சி பெல்ஜியத்தில் தஞ்சம்; நாடு கடத்த இந்தியா தீவிரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ரூ.13,850 கோடி வங்கி கடன் மோசடியில் ஈடுபட்ட வைர வியாபாரி மெஹூல் சோக்சி பெல்ஜியத்தில் தஞ்சமடைந்துள்ளார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தும் பணியில் அதிகாரிகள் மும்முரம் காட்டி வருகின்றனர்.மும்பையைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி, அவரது உறவினர் மெஹுல் சோக்சி உள்ளிட்டோர், மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,000 கோடி ரூபாய் கடன் பெற்று அதை திருப்பி செலுத்தாமல், 2018ல் வெளிநாடு தப்பினர். இது தொடர்பாக அமலாக்கத் துறை மற்றும் சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. நீரவ் மோடி, லண்டனில் கைது செய்யப்பட்டார். அவர் மீது பல வழக்குக்கள் நிலுவையில் உள்ள நிலையில், நீரவின் சொத்துக்களை அமலாக்கத் துறை பறிமுதல் செய்து விட்டது. மெஹூல் சோக்சி ஆன்டிகுவா நாட்டில் வசித்து வருகிறார் என்ற தகவலை ஆன்டிகுவா வெளியுறவு அமைச்சர் மறுத்தார். அவரது மனைவி பிரீத்தி சோக்சி பெல்ஜியம் குடியுரிமை பெற்றவர். அவர் மூலமாக சோக்சி பெல்ஜியம் குடியுரிமை பெற்று தங்கி உள்ளார். இது தற்காலிக குடியுரிமை என்றும், ஒருவேளை பெல்ஜியத்தின் நிரந்தர குடியுரிமையை சோக்சி பெற்றால் அவர் எளிதாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று வர முடியும். இதனால், சோக்சியை பெல்ஜியத்தில் இருந்து நாடு கடத்த இந்திய அதிகாரிகள் நடவடிக்கையை தொடங்கி உள்ளனர். இது தொடர்பாக பெல்ஜியம் அதிகாரிகளிடம் இந்திய அதிகாரிகள் பேச்சு நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Naga Subramanian
ஏப் 14, 2025 11:29

ராணாவை அள்ளிக்கொண்டு வந்ததைப் போன்று, நீரவ்+ மெஹுல்+ மல்லய்யா ஆகிய மூவரையும் ஆளும் மத்திய அரசு கொண்டு வந்துவிடும் என்ற நம்பிக்கை உள்ளது. 2029க்கு முன்பு கட்ச தீவும் நம் வந்தாக வேண்டும். அதையும் ஆளும் பாஜக அரசு, ஜம்முவை எப்படி 370யை விளக்கி பாரத தேசத்துக்கு உள்ளே கொண்டு வந்ததோ, அதேபோல இதையும் செய்து விடும் நம்பிக்கை உள்ளது. இவை அனைத்தும் காலஞ்சென்ற காங்கிரஸ் ஆட்சியில் நடந்தேறியவை என்பது யாவரும் அறிந்ததே.


மோகனசுந்தரம் லண்டன்
மார் 23, 2025 16:17

என்னவோ போங்கள் இதுவரையில் ஒருவனையும் இங்கே கொண்டு வரவில்லை. லண்டனில் இருவர் usa யில் ஒருவர்


Shankar
மார் 23, 2025 11:44

சாமான்ய மனிதனிடம் ஆயிரம் ஆதாரங்கள் இருந்தும் ஒரு லட்ச ரூபாய் கடன் கொடுக்காத இந்த வங்கிகள் இவரைப்போன்றோருக்கு கோடிக்கணக்கில் கடன் கொடுக்கும் வங்கி அதிகாரிகள் மீது முதலில் நடவடிக்கை வேண்டும். ஒரு அதிகாரியை தூக்கி சிறையில் அடைத்தால் தான் அடுத்த அதிகாரிக்கும் பயம் வரும்.


சுந்தரம் விஸ்வநாதன்
மார் 23, 2025 10:55

இந்த டிராமா எடுபடாதுன்னுதான் நினைக்கிறேன். ஏற்கனவே நாங்க பலமுறை மல்லையா டிராமா பார்த்துட்டோம். ஐநூறு கோடி சுருட்டுன லலித் மோடியை காப்பாத்தோ காப்பாத்துன்னு காப்பாத்துனவங்க இறந்தே போயிட்டாங்க. மல்லையாவை மக்கள் மறந்தே போயிட்டாங்க. தென் ஆப்பிரிக்கா போனபோது இந்த சோக்சியை நம்ம பெரிய மனுஷன்தான் மத்தவங்களுக்கு அறிமுகமே செஞ்சு வச்சாரு.


अप्पावी
மார் 23, 2025 09:02

உலகம்சுற்றும் வாலிபன்.


VENKATASUBRAMANIAN
மார் 23, 2025 08:02

முதலில் இவர்களின் சொத்துக்களை முடக்க வேண்டும். வங்கி கணக்குகள் முடக்கப்படவேண்டும்.அப்புறம் எப்படி வெளிநாடு ஓட முடியும். நீதிமன்றங்கள் முதலில் இதை செய்ய வேண்டும்.


panneer selvam
மார் 23, 2025 10:52

Just by confiscating their properties and assets in India, will not prevent escape from India . These guys are doing international business and definitely will have assets in foreign countries . They will not stave at that places. Unless we reciprocal agreement , extradition is very difficult and time consuming process. Even in India , Indian courts are very reluctant to order extradition of any accused persons to foreign lands.


ديفيد رافائيل
மார் 23, 2025 07:48

Fraud பண்றவங்க மட்டும் தான் இந்த உலகத்தில் நல்லா வாழ முடியும் போல