உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மேகதாது அணை விவகாரம்; தமிழக அரசிடம் கருத்து கேட்க உச்சநீதிமன்றம் உத்தரவு

மேகதாது அணை விவகாரம்; தமிழக அரசிடம் கருத்து கேட்க உச்சநீதிமன்றம் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மேகதாது அணை விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கும் முன்பாக தமிழக அரசிடம் கருத்துக் கேட்க வேண்டும் காவிரி மேலாண்மை வாரியத்திற்கு உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியில் கர்நாடகா அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. ரூ.9000 கோடியிலான இந்த திட்டத்திற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதேபோல, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களும் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன.இந்த நிலையில், மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசும், கர்நாடகா அரசும் மாறி மாறி வழக்குகளை போட்டுள்ளன. மேகதாது அணைக்கு அனுமதி அளிக்க உத்தரவிடக் கோரி கர்நாடகா அரசு தாக்கல் செய்யப்பட்ட மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு மற்றும் கர்நாடகா அரசுகள் மாறி மாறி தங்களின் வாதங்களை முன்வைத்தனர்.தமிழக அரசு வாதம்; கர்நாடகா அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டுவது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகம் பெரிதும் பாதிக்கப்படும். அணை கட்ட ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். கபினி, கேஆர்எஸ் அணைகளில் இருந்து வரும் உபரி நீர் வேறு ஒரு அணை கட்டுவதால், 80 டிஎம்சி தண்ணீர் தடைபடும் அபாயம் ஏற்படும். ஏற்கனவே, காவிரியின் குறுக்கே போதுமான அணைகள் கர்நாடகாவில் உள்ளன. புதிய அணை தேவையில்லை.உச்சநீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும் கூட காவிரியில்ர தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை திறந்து விடாமல் கர்நாடகா அரசு இருந்துள்ளது. 50 வருடங்களாக காவிரி தண்ணீருக்காக கர்நாடகாவுடன் போராடி வருகிறோம். அணை கட்டப்பட்டால் நிச்சயம் தண்ணீர் கிடைக்காது, இவ்வாறு வாதிடப்பட்டது.இதனைக் கேட்ட தலைமை நீதிபதி அமர்வு, மாநிலங்களுக்கிடையே நிலவும் நதிநீர் பிரச்னைகள் எந்த ஒரு காலத்திலும் முடிவடையப் போவதில்லை. மேகதாது அணை கட்டுவது தொடர்பான விரிவான திட்ட அறிக்கை மீது மத்திய நீர்வள ஆணையம் முடிவு எடுப்பதற்கு முன்பு தமிழக அரசின் அனுமதியை கட்டாயம் கேட்க வேண்டும். அதேபோல, காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நதிநீர் ஒழுங்காற்று ஆணையம் ஆகியவற்றின் பரிந்துரைகள் மற்றும் கருத்துகளையும் கேட்டு முடிவு எடுக்க வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பிக்கும் உத்தரவுகளை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும், என்றனர்.மேலும், மேகதாது அணைக்கு திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று கர்நாடகா அரசின் வாதத்தை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. இதன்மூலம், மேகதாது அணை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் முடித்து வைக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ