உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீர் சட்டசபையில் 2வது நாளாக அமளி: கைகலப்பு

காஷ்மீர் சட்டசபையில் 2வது நாளாக அமளி: கைகலப்பு

ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீர் சட்டசபை கூட்டத்தொடர் துவங்கிய நாளில் இருந்து, தொடர்ந்து தினமும் அமளியை சந்தித்து வருகிறது. நேற்று (அக்-7) , ஆளும் தேசிய மாநாட்டு கட்சியினரும், எதிர்க்கட்சியான பா.ஜ.,வினரும் கைகலப்பில் ஈடுபட்டனர். அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர் குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டனர். இது போல் இன்றும் (அக்-8) பா.ஜ., எம்எல்ஏ.,க்களும், மகபூபா தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சியின் எம்எல்ஏ.,க்களும் ஒருவரை ஒருவர் தாக்கி கைகலப்பில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து எம்எல்ஏக்கள் பாதுகாவலர்களால் வெளியேற்றப்பட்டனர். சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின், ஜம்மு - காஷ்மீர் சட்டசபைக்கு தேர்தல் நடத்தப்பட்டு, ஆறு ஆண்டுகளுக்கு பின், சட்டசபை கூட்டத்தொடர் சமீபத்தில் துவங்கியது. முதல் நாளில் இருந்தே, சட்டசபையில் கட்சிகள் மாறி மாறி அமளியில் ஈடுபட்டு வருகின்றன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ufqs6owm&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

சிறப்பு அந்தஸ்து

இந்நிலையில், ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை மீண்டும் அளிக்கக் கோரும் தீர்மானம், நேற்று முன்தினம் கடும் அமளிக்கு இடையே நிறைவேற்றப்பட்டது. சட்டசபை நேற்று துவங்கியதும், இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ.,வைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் சுனில் சர்மா பேசினார். அதற்கு, ஆளும் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.ஆவாமி இதேஹத் கட்சியின் எம்.பி.,யான இன்ஜினியர் ரஷீத்தின் சகோதரரான எம்.எல்.ஏ., ஷேக் குர்ஷீத், கையில் ஒரு பேனருடன் சபையின் நடுப்பகுதிக்கு வந்தார். 'சிறப்பு அந்தஸ்தை மீண்டும் அளிக்க வேண்டும்; அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும்' என, அதில் எழுதப்பட்டிருந்தது. இதற்கு, பா.ஜ.,வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஷேக் குர்ஷீத்திடம் இருந்து பேனரை பறிக்க பா.ஜ., உறுப்பினர்கள் முயன்றனர். அதை தடுக்க காவலர்கள் முயன்றனர். இதனால், கடும் தள்ளுமுள்ளு, கைகலப்பு ஏற்பட்டது. பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் சபையின் மையப் பகுதிக்குள் நுழைந்து, அந்த பேனரை பறித்து, கிழித்து எறிந்தனர். இதையடுத்து, 15 நிமிடங்களுக்கு சபையை ஒத்திவைத்தார் சபாநாயகர் அப்துல் ரஹீம் ரத்தேர். ஆனாலும், பா.ஜ., உறுப்பினர்கள் சபையின் நடுப்பகுதியில் நின்று கோஷமிட்டனர். சபை மீண்டும் கூடியதும், இந்த கோஷம் தீவிரமானது.

தள்ளுமுள்ளு

இதையடுத்து, சபையின் நடுப்பகுதியில் நின்று கோஷமிடும் பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்களை வெளியேற்றும்படி, சபை காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். அப்போது, சபை காவலர்களுக்கும், பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மூன்று எம்.எல்.ஏ.,க்கள் குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டனர். அந்த நேரத்தில், பா.ஜ., மற்றும் ஆளும் தேசிய மாநாட்டு கட்சி எம்.எல்.ஏ.,க்கள் பரஸ்பரம் கோஷம் எழுப்பினர். அனைவரும் எழுந்து நின்றும், மையப் பகுதிக்குள் நுழைந்தும் கோஷமிட்டனர். இதனால், பெரும் அமளி எழுந்தது. இரு தரப்பும் எழுப்பிய கோஷங்களை சபைக்குறிப்பில் இருந்து நீக்கி சபாநாயகர் உத்தரவிட்டார். மேலும், சபையை நாள் முழுதும் ஒத்திவைத்தும் உத்தரவிட்டார்.

புதிய தீர்மானம் தாக்கல்!

ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து அளிக்கக் கோரி, மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் சமீபத்தில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. அது, விதிகளுக்கு முரணானது என்று ஆளும் தரப்பில் கூறப்பட்டது.இதே கோரிக்கையை முன்வைத்து, ஆளும் தரப்பின் சார்பில் நேற்று முன்தினம் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டது. பா.ஜ., உள்ளிட்டோரின் எதிர்ப்புக்கு இடையே, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து, பா.ஜ., அமளியில் ஈடுபட்டது. மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் ஜம்மு - காஷ்மீர் மக்கள் மாநாடு கட்சி சார்பில், இதே கோரிக்கையை வலியுறுத்தி நேற்று புதிய தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.இது குறித்து மக்கள் ஜனநாயக கட்சியின் வஹீத் பாரா கூறுகையில், ''மீண்டும் சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என்று கோரினால் போதாது; நீக்கப்பட்டதை கண்டிக்க வேண்டும். ஆனால், கண்டிக்காமல் கோரிக்கை மட்டும் வைத்துள்ளனர். அதனால், புதிய தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

J.V. Iyer
நவ 08, 2024 17:58

இவர்களுக்கு ஜனநாயகம் லாயக்கல்ல. ராணுவம்தான் சரி. உடனே சட்டசபையை கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சி கொண்டுவரவேண்டும்.


Muralidharan raghavan
நவ 08, 2024 16:53

இதற்கு தேர்தலே நடத்தி இருக்க வேண்டாம். மடையர்கள் சிறப்பு அந்தஸ்த்து திரும்ப வரப்போவது இல்லை. இது எப்படி இருக்கு என்றால் நீட் தேர்வை எதிர்த்து தமிழக சட்டசபையில் தீர்மானம் கொண்டுவந்தது போல உள்ளது. எதுவும் நடக்க போவதில்லை. தேவையற்ற அமளி


தமிழ்வேள்
நவ 08, 2024 11:06

கொலிஜியம் முறையை ஒழித்தால் தவிர தேவையற்ற கோர்ட் தலையீடுகள் நிற்காது ....காஷ்மீரில் சட்டமன்றம் தேர்தல் எல்லாம் தேவையற்ற ஆணி ..அமைதியான வாழ்வே முக்கியம் ..கோர்ட்டின் தவறான புரிதலால் [சட்டம் வேறு -நடைமுறை யதார்த்தம் வேறு ] தற்போது மீண்டும் கொலை கொள்ளை ,குண்டுவீச்சு ....காஷ்மீர் மீண்டும் ராஷ்ட்ரபதியின் நேரடி நிர்வாகத்தில் வரவேண்டும் ....தேர்தல் முறை ஜனநாயகம் தேவையில்லை ...


R.PERUMALRAJA
நவ 08, 2024 08:31

உமர் அப்துல்லா பதவியேற்ற நாளிலிருந்து இந்தியாவின் பிற பகுதி மக்கள் மீது கொலை சம்பவங்கள் அரங்கேற்றிகொண்டு இருக்கிறார், மத்தியில் ஆளும் ப ஜா கா வேடிக்கை பார்த்து கொண்டுஇருக்கிறது , ப ஜா கா உமரை ஒழித்து கட்டி மீண்டும் ஜனாதிபதி ஆட்சியை நிறுவவேண்டும் .


Dharmavaan
நவ 08, 2024 07:50

பிரிவினை பேசும் எல்லாக்கட்சிகளின்[ திராவிட, mamtha, Umar கட்சிகள் அங்கீகாரங்கள் ரத்து செய்யப்பட வேண்டும்


Anvar
நவ 08, 2024 06:29

சட்ட சபையை களைத்து விட்டு மீண்டும் ஆளுநருக்கு கீழ் ஆட்சியை கொண்டு வாருங்கள் தேர்தல் சட்டசபை உறுப்பினர்கள் எல்லாம் வீண் சிலவு மக்களுக்கு ஒன்னும் நல்லது நடக்காது போல


Kasimani Baskaran
நவ 08, 2024 05:47

இந்தியாவுக்கு எதிராக செயல்படும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். பாராளுமன்றத்தை மாநில சட்டசபை எப்படி எதிர்க்க முடியும்? டிஸ்மிஸ் செய்தால் கூட தப்பில்லை.


naranam
நவ 08, 2024 04:45

காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி இருப்பதே நாட்டுக்கு நல்லது.


Dharmavaan
நவ 08, 2024 09:36

எல்லாவற்றுக்கும் நடைமுறை அறிவற்ற கோர்ட் முட்டுக்கட்டை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை