உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மனநிலை குன்றியவர் அடித்துக் கொலை

மனநிலை குன்றியவர் அடித்துக் கொலை

புதுடில்லி:வேன் கண்ணாடியை உடைத்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் அடித்துக் கொலை செய்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.ரோஹிணி பிரேம் நகர் அகர் நகரில் வசித்தவர் தீபக்,32. மனநலம் பாதிக்கப்பட்டவர். நேற்று முன் தினம் இரவு 9:00 மணிக்கு தன் வீட்டின் அருகே நிறுத்தப்பட்டு இருந்த டெம்போ வேன் கண்ணாடியை உடைத்தார். அந்த வேன் உரிமையாளர் உட்பட 5 பேர் தீபக்கை இரும்புக் கம்பி மற்றும் கட்டையால் சரமாரியாகத் தாக்கினர். அவரது குடும்பத்தினர் தீபக்கை மீட்டு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர்கள் தீபக் ஏற்கனவே மரணம் அடைந்து விட்டதை உறுதி செய்தனர்.தீபக் தந்தை கொடுத்த புகார்படி கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார், 5 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை