உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒரே நாளில் 9.20 லட்சம் பேர் பயணம் மெட்ரோ நிர்வாகம் புதிய மைல்கல்

ஒரே நாளில் 9.20 லட்சம் பேர் பயணம் மெட்ரோ நிர்வாகம் புதிய மைல்கல்

பெங்களூரு: ஒரே நாளில் 9.20 லட்சம் பேர், மெட்ரோ ரயில்களில் பயணம் செய்து இருப்பதன், மெட்ரோ நிர்வாகம் புதிய மைல்கல் எட்டி உள்ளது.பெங்களூரில் போக்குவரத்து நெரிசலை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், 2011ம் ஆண்டு மெட்ரோ ரயில் சேவை துவங்கப்பட்டது. தற்போது ரயில் சேவை துவங்கி 13 ஆண்டுகள் ஆகின்றன. வீட்டில் இருந்து நீண்ட துாரம் உள்ள அலுவலகத்திற்கு செல்வோர், பெரும்பாலும் மெட்ரோ ரயிலில் தான் செல்கின்றனர். காலை, மாலை நேரங்களில் ரயிலில் கூட்டம் நிரம்பி வழிகிறது.கடந்த அக்டோபர் மாதம், ஒரேநாளில் மெட்ரோ ரயில்களில் 8 லட்சம் பேர், பயணம் செய்தது சாதனையாக அமைந்தது. இந்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில், மெட்ரோ ரயில்களில் 9 லட்சத்து 20 ஆயிரத்து 562 பேர் பயணம் செய்துள்ளனர்.இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாக 'எக்ஸ்' வலைதள பதிவு:டிசம்பர் 6ம் தேதியன்று, செல்லகட்டா - ஒயிட்பீல்டு இடையில் இயக்கப்பட்ட மெட்ரோ ரயில்களில் 4,39,616 பேரும்; மாதவாரா - சில்க் இன்ஸ்டிடியூட் மெட்ரோ ரயில்களில் 3,12,248 பேரும்; இன்டர்சேஞ்ச் ஆக உள்ள மெஜஸ்டிக் ரயில் நிலையத்தில் இருந்து 1,67,617 பேரும்; காகித டிக்கெட் எடுத்து 1,081 பேரும் என 9 லட்சத்து 20 ஆயிரத்து 562 பேர் பயணம் செய்து உள்ளனர். பயணியரால் இந்த மைல்கல் சாத்தியமானது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை