உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  மெட்ரோ ரயில் நிலையத்தின் பெயர் மாற்றம்

 மெட்ரோ ரயில் நிலையத்தின் பெயர் மாற்றம்

புதுடில்லி: கிழக்கு டில்லி மயூர் விஹார் -1 மெட்ரோ ரயில் நிலையத்தின் பெயர், ஸ்ரீராம் மந்திர் மயூர் விஹார் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து, டில்லி மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி கூறியதாவது: உள்ளூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையைத் தொடர்ந்து, முதல்வர் ரேகா குப்தா தலைமையிலான டில்லி மாநில பெயர் ஆணையம் மயூர் விஹார் -1, மெட்ரோ ரயில் நிலைய பெயரை, ஸ்ரீராம் மந்திர் மயூர் விஹார் என மற்ற முடிவு செய்யப்பட்டது. பெயர் மாற்றும் நடைமுறைகள் முடிந்து விட்டன. விரைவில் அறிவிப்பு வெளியாகும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ