உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மரக்கிளை முறிந்து விழுந்ததால் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு

மரக்கிளை முறிந்து விழுந்ததால் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு

பெங்களூரு : பெங்களூரில் இளஞ்சிவப்பு மெட்ரோ ரயில் வழித்தடத்தில் மரக்கிளை முறிந்து விழுந்ததால், இரண்டு மணி நேரம் மெட்ரோ சேவை பாதிக்கப்பட்டது.பெங்களூரில் கடந்த மூன்று நாட்களாக கன மழை பெய்து வருகிறது. நேற்று காலை 6:15 மணியளவில் ஒயிட்பீல்டில் இருந்து செல்லகட்டா வரையிலான இளஞ்சிவப்பு வழித்தட மெட்ரோ ரயில் இயங்கியது.இந்திரா நகர் - சுவாமி விவேகானந்தா சாலை இடையே வரும் போது, மரக்கிளை முறிந்து விழுந்தது. உடனடியாக மெட்ரோ ரயில் பைலட், ரயிலை நிறுத்தி, அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.மெட்ரோ ரயிலில் இருந்த பயணியர், ரயிலில் இருந்து இறங்கி, மெட்ரோ பாலத்தின் நடைபாதை வழியாக அடுத்த மெட்ரோ ரயில் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.உடனடியாக அங்கு வந்த ஊழியர்கள், மரக்கிளைகளை அப்புறப்படுத்தினர்.இதனால் எம்.ஜி., சாலையில் இருந்து பையப்பனஹள்ளி இடையே ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதற்கு பதிலாக, மெட்ரோ நிர்வாகம் சார்பில் இணைப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.இந்திரா நகரில் இருந்து செல்லகட்டா வரையிலும்; யைப்பனஹள்ளியில் இருந்து ஒயிட்பீல்டு வரையில் மட்டுமே மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டன. மரக்கிளைகள் அகற்றப்பட்டு, மீண்டும் 8:05 மணிக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி