உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 36 மணி நேரமாக நீடித்த தொழில்நுட்ப கோளாறு பிரச்னை முடிவுக்கு வந்தது; மைக்ரோசாப்ட் அறிவிப்பு

36 மணி நேரமாக நீடித்த தொழில்நுட்ப கோளாறு பிரச்னை முடிவுக்கு வந்தது; மைக்ரோசாப்ட் அறிவிப்பு

-நமது நிருபர்-மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அவுட்லுக், டீம்ஸ், கோபைலட் சேவைகள் நேற்று திடீரென முடங்கின; இந்த மிகப்பெரிய தொழில்நுட்ப கோளாறு காரணமாக, உலகம் முழுவதும் 74 நாடுகளில் வணிக நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களின் தகவல் தொடர்பு கடுமையாக பாதிக்கப்பட்டது. 36 மணி நேரமாக நீடித்த செயலிழப்பு தற்போது சரிசெய்யப்பட்டு விட்டதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தொழில்நுட்ப கோளாறுக்கு காரணத்தை கண்டறிந்து சேவை மீட்டெடுத்துள்ளோம் என தெரிவித்துள்ளது.பயனர்களுக்கு ஏற்பட்ட இந்த இடையூறுக்காக நாங்கள் மிகுந்த வருத்தம் தெரிவிக்கிறோம் என மைக்ரோசாப்ட் நிறுவனம் கூறியுள்ளது. இது சைபர் தாக்குதல் அல்லது ஏஐ ஏஜென்ட்களால் எற்பட்ட பிரச்னை கிடையாது. தொழில்நுட்பக் கோளாறே இதற்கு முழுமையான காரணம் என தெளிவுப்படுத்தி உள்ளது. இந்தியாவில், இந்தச் செயலிழப்பு இண்டிகோ மற்றும் அகாசா ஏர் நிறுவனங்களின் மின்னஞ்சல் சேவையைப் பாதித்தது. ஏர் இந்தியா, வாடிக்கையாளர் செய்திகளைத் தொடர்ந்து பெறுவதற்காகத் தனது மின்னஞ்சல்களை வேறு வழிக்கு மாற்றியது, மேலும் அதன் விமானங்கள் வழக்கம் போல் இயங்கின. செயலிழப்பின் போது அனுப்பப்பட்ட செய்திகள் தொலைந்து போகாமல் இருப்பதை உறுதிசெய்ய, மைக்ரோசாப்ட் நிறுவனம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. மைக்ரோசாப்ட் சேவைகள் முடக்கத்தால் இந்திய மதிப்பில் ரூ.66,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ