நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.72 உயர்வு
புதுடில்லி:கரீப் சீசன் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை, ஒரு குவின்டாலுக்கு 72 ரூபாய் உயர்த்தி, 2,441 ரூபாயாக மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான கேபினட் குழு இந்த விலையை நிர்ணயம் செய்துள்ளது. இதன்படி 2026 - 27 கரீப் சந்தை சீசனில் விளைவிக்கப்படும் ஏ கிரேடு நெல்லுக்கு ஒரு குவின்டாலுக்கு 72 ரூபாய் உயர்த்தி 2,441 மற்றும் 2,461 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளதாவது: உற்பத்தி செலவோடு 50 சதவீதம் கூடுதலாக விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதற்காக 2.60 லட்சம் கோடி ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்படும். 824 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்படும் என கணிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.