உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 12 கல்லூரிக்கு ரூ.417 கோடி அமைச்சர் ஆஷிஷி சூட் தகவல்

12 கல்லூரிக்கு ரூ.417 கோடி அமைச்சர் ஆஷிஷி சூட் தகவல்

புதுடில்லி:“டில்லி பல்கலையின் 12 கல்லூரிகளுக்கு 417 கோடி ரூபாய் மானியத் தொகை வழங்கப்பட்டுள்ளது,”என, கல்வி அமைச்சர் ஆஷிஷ் சூட் கூறினார்.டில்லியில் பா.ஜ., அரசு பொறுப்பேற்று, 100 நாட்களை நிறைவு செய்துள்ள நிலையில், கல்வி அமைச்சர் ஆஷிஷ் சூட், தன் துறை சாதனைகள் குறித்து நேற்று கூறியதாவது: டில்லி மக்களின் நலனுக்காக பா.ஜ., அரசு செயல்படுகிறது. டில்லி பல்கலையின், 12 கல்லூரிகளுக்கும் 417 கோடி ரூபா மானியத் தொகை வழங்கப்பட்டுள்லது.முந்தைய ஆம் ஆத்மி அரசு, நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் படிக்கும் டில்லி பல்கலை கல்லூரிகளுக்கு மானியம் வழங்கவில்லை. ஆனால், பா.ஜ., அரசு ஏப்ரல் 1ம் தேதி மானியத் தொகையை வழங்கி விட்டது. பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்காக, 2,500 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு சீரமைக்கப்பட்டுள்ளது.டில்லி நகர்ப்புற தங்குமிடம் மேம்பாட்டு வாரியத்துக்கு பட்ஜெட்டில், 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை