உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மேக் இன் இந்தியா வெற்றியை ஒப்புக்கொண்ட ராகுலுக்கு நன்றி: அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

மேக் இன் இந்தியா வெற்றியை ஒப்புக்கொண்ட ராகுலுக்கு நன்றி: அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பிரதமர் மோடியின் 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் வெற்றியை ஒப்புக்கொண்டதற்கு, எதிர்க்கட்சி தலைவர் ராகுலுக்கு நன்றி என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.கர்நாடகாவின் பெங்களூருவை அடுத்த தேவனஹள்ளியில் உள்ள ஐபோன் தயாரிப்பு ஆலையில், 9 மாதத்துக்குள் 30,000 பேரை, வேலைக்கு அமர்த்தி, தைவானைச் சேர்ந்த 'பாக்ஸ்கான்' நிறுவனம் சாதனை படைத்துள்ளது.இது தொடர்பான செய்தியை தன் சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்த காங்., எம்.பி.,ராகுல், கவுரவமான வேலைகள், அனைவருக்குமான வாய்ப்புகள் என கர்நாடக அரசுக்கு பாராட்டு தெரிவித்துஇருந்தார்.இந்நிலையில், மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தன் சமூகவலைதள பக்கத்தில், 'பிரதமர் நரேந்திர மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தின் வெற்றியை ஒப்புக்கொண்டதற்கு நன்றி.'பிரதமரின் தொலைநோக்கு பார்வையை முழுமையாக செயல்படுத்தி வருவதால், நாம் ஒரு உற்பத்தி பொருளாதாரமாக மாறி வருகிறோம்' என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

அப்பாவி
டிச 26, 2025 15:36

இத்தனை ரயில் விபத்துக்களை ஏற்றுக்கொண்ட மக்களுக்கும் நன்றி சொல்லுங்க.


Gokul Krishnan
டிச 26, 2025 11:54

மேக் இன் இந்திய திட்டம் வெற்றி என்றால் ஏன் ஆப்பிள் நிறுவனம் டபிள் என்ஜின் சர்கார் நடக்கும் மத்ய பிரதேசத்தில் சத்திஸ்க்கரில் வரவில்லை


vivek
டிச 26, 2025 13:02

அது ஏன் தமிழ்நாட்டுக்கு எதுவுமே வரவில்லை...கொஞ்சம் சொல்லேன்


vivek
டிச 26, 2025 13:04

தமிழ்நாட்டுக்கு வரவேண்டியது ஆந்திர போயாச்சு...எப்படி


Barakat Ali
டிச 26, 2025 11:53

ராகுலுக்கு பதில் சொல்லிக்கொண்டிருக்க வேண்டுமா ????


vaiko
டிச 26, 2025 04:18

ஒரு வந்தே பாரத் ரயிலை கூட துவக்கி வைக்க முடியவில்லை


Srinivasaraghavan Lashmanan
டிச 26, 2025 09:57

நீங்கள் எந்த வந்தே பாரத் ரயிலை பற்றி சொல்கிறீர்கள் ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை