வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இப்படிப் படிப்பறிவற்றோர் காங். கில் அதிகம்
பெங்களூரு: காணொளி காட்சி வழியாக கருத்தரங்கு நடந்தபோது, மாணவர் ஒருவர், 'அமைச்சர் மது பங்காரப்பாவுக்கு கன்னடம் தெரியாது' என, கூறியதால் அவர் தர்மசங்கடத்துக்கு ஆளானார். மாணவரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.தொடக்க, உயர்நிலை பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மதுபங்காரப்பாவுக்கு, கன்னடம் சரியாக வராது. பல முறை வார்த்தைகளை தவறாக உச்சரித்து, தர்மசங்கடத்துக்கு ஆளாகி உள்ளார். தனக்கு கன்னடம் சரியாக பேச, எழுத வராது என்பதை அவரே ஒப்புக்கொண்டுள்ளார்.இம்மாதம் 1ம் தேதி, பெங்களூரின் கன்டீரவா விளையாட்டு அரங்கில் நடந்த, கன்னட ராஜ்யோத்சவா நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் மது பங்காரப்பா, கன்னட வார்த்தைகளை தவறாக உச்சரித்தார். சங்கதி என்பதற்கு பதிலாக சங்காதி என்றார். இதுபோன்று பல இடங்களில் வார்த்தைகளை தவறாக உச்சரித்ததை, ஊடகத்தினர் சுட்டிக்காட்டினர். இவரை கன்னட அமைப்பினர் கண்டித்தனர்.இந்நிலையில், பெங்களூரு விதான் சவுதாவில், கல்லுாரி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக நீட், சி.இ.டி., கோச்சிங் பயிற்சியை, அமைச்சர் மது பங்காரப்பா நேற்று துவக்கி வைத்தார். அதன்பின் மாணவர்களுடன் காணொளி காட்சி வழியாக கருத்தரங்கு நடத்தினார்.அவர் பேசும் போது ஒரு கல்லுாரி மாணவர், அமைச்சரிடம் ஏதோ கேள்வி எழுப்பினார். இவ்வேளையில் மற்றொரு மாணவர், 'ஏய் அமைச்சருக்கு கன்னடம் தெரியாது' என, சத்தமாக கூறினார். இதனால், அமைச்சர் மது பங்காரப்பாவுக்கு தர்மசங்கடம் ஏற்பட்டது.அந்த மாணவர் எந்த கல்லுாரியை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. கோபமடைந்த அமைச்சர், 'யார் அது அப்படி பேசுவது. விவேகம் இல்லாதவரின் பேச்சை யாரும் கேட்காதீர்கள். அந்த மாணவர் யார் என விசாரித்து, அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுங்கள்' என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இப்படிப் படிப்பறிவற்றோர் காங். கில் அதிகம்