உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கடலுக்கு அடியில் புல்லட் ரயில் சுரங்க பாதையில் அமைச்சர் ஆய்வு

கடலுக்கு அடியில் புல்லட் ரயில் சுரங்க பாதையில் அமைச்சர் ஆய்வு

மும்பை மும்பை - ஆமதாபாத் இடையிலான புல்லட் ரயில் திட்டத்திற்காக கடலுக்கடியில் அமைக்கப்படும் சுரங்கப் பாதை பணிகளை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று ஆய்வு செய்தார். மஹாராஷ்டிராவின் மும்பை மற்றும் குஜராத்தின் ஆமதாபாத் இடையே, நாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அடுத்த ஆண்டு முதல் இந்த சேவையை துவங்க திட்டமிடப்ட்டுள்ளது. இதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. குஜராத்தில் எட்டு, மஹாராஷ்டிராவில் நான்கு என மொத்தம் 12 ரயில் நிலையங்கள் இந்த வழித்தடத்தில் இடம்பெற உள்ளன. புல்லட் ரயில் செல்வதற்காக, பந்த்ரா குர்லா காம்பளக்ஸ் மற்றும் ஷில்பாதா இடையே, 7 கி.மீ., துாரம் கடலுக்கடியில் சுரங்கப் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளை ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:கடலுக்கடியில் சுரங்கப் பாதை வடிவமைக்கப்பட்டு மிகுந்த கவனத்துடன் கட்டப்பட்டு வருகிறது. இரண்டு ரயில்கள் மணிக்கு 250 கி.மீ., வேகத்தில் செல்வதற்கு ஏதுவாக நவீன தொழில்நுட்பத்துடன் பணிகள் நடந்து வருகின்றன. காற்றோட்டம் மற்றும் விளக்கு வெளிச்சங்களுடன், சுற்றுச்சூழல் பாதுகாப்பும் கவனிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

ManoharRaj
ஜன 20, 2025 11:15

இந்தியா வளர்ச்சி பாதையில் செல்வது பலருக்கு வயிற்றில் அமிலம் சுரப்பது போன்ற நிலையை தருகிறது. அவர்கள் ஜெலசில் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்


Sethuraman
ஜன 19, 2025 11:41

திருட்டு தீயசக்திகள் விடியா, சொரியாசிஸ்க்கு ஓட்டு போட்டுட்டு இந்த வீணப்பய கேள்வி கேட்க கூடாது.


Chockalingam C
ஜன 21, 2025 17:46

சூப்பர்??? sir


அப்பாவி
ஜன 19, 2025 10:33

தண்ணீருக்கடியிலிருந்து பேசினா சரியா கேட்டிருக்குமா? எம்.பி.ஏ வேறே படிச்சிருக்காரு.


aaruthirumalai
ஜன 19, 2025 08:43

வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது. தெற்கில் பிரமாண்ட திட்டங்கள் இல்ல


அப்பாவி
ஜன 19, 2025 08:06

இரைச்சல் இல்லாத இடத்தில் பேசுனாரா? எல்லோருக்கும் தெளிவா விழுந்திச்சா? இல்லேன்னா தனுஷ்கோடி பத்தி பேசியிருக்கப் போறாரு


முருகன்
ஜன 19, 2025 07:38

பாம்பன் பாலம் மாதிரி ஆகி விடமால் கவனமுடன் வேலை செய்ய வேண்டும்


Kasimani Baskaran
ஜன 19, 2025 07:20

சிறப்பு.


J.V. Iyer
ஜன 19, 2025 04:26

இந்த சுரங்கப்பாதையில் பயணிக்க பாதுகாப்பு கருதி போர்கிஸ்தானியர்களை, பங்களாதேசிகளை ஹிந்துஸ்தானுக்குள் வர தடை செய்யவேண்டும்.


B MAADHAVAN
ஜன 19, 2025 01:41

பிரதமர் திரு மோடி தலைமையில் பாரதம் "மிக்க வளர்ச்சி பாதை"யை நோக்கி செல்வது நமக்கு எல்லாம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தொடரட்டும் சிறந்த பணி....


புதிய வீடியோ