உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சீனாவுடனான உறவு புதுப்பிப்பு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்

சீனாவுடனான உறவு புதுப்பிப்பு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்

புதுடில்லி : “எல்லையில் இருந்து படைகள் விலக்கி கொள்ளப்பட்டது, ஒரு பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டதாகவே பார்க்கிறோம். இதனால், சீனா உடனான உறவு புதுப்பிக்கப்படும் என்பதாக பார்க்க முடியாது,” என, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.டில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில், பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது:கிழக்கு லடாக் எல்லையில், 2020ல் இருந்து இரு நாட்டு படைகளும் குவிக்கப்பட்டிருந்தன. பேச்சுக்குப் பின், சில இடங்களில் இருந்து படைகள் விலக்கி கொள்ளப்பட்டன. சமீபத்தில் செய்யப்பட்ட உடன்பாட்டின்படி, மீதமுள்ள இடங்களில் இருந்தும் படைகள் விலக்கி கொள்ளப்பட்டன.இதை, அந்த பிரச்னைக்கான தீர்வாகவே பார்க்கிறேன். இந்த நடவடிக்கையால், சீனாவுடனான இரு தரப்பு உறவு உடனடியாக புதுப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்க முடியாது. எல்லையில் இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையே உள்ள மற்ற பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டும்.இந்தியா - சீனா உறவு என்பது ஒரு சிக்கலான விஷயம். இவற்றில் தீர்வு காணப்படுவதற்கான அடுத்தக்கட்ட முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி