உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்கிய அமைச்சர் ஜமீர்

ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்கிய அமைச்சர் ஜமீர்

சாம்ராஜ்பேட்டை,: ஆனந்தபுரம் பகுதியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த பெண் குடும்பத்தினருக்கு, தொகுதி எம்.எல்.ஏ., ஜமீர் அகமது கான் ஐந்து லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கினார். சாம்ராஜ்பேட்டை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வும், அமைச்சருமான மக்கள் குறை கேட்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். சாம்ராஜ்பேட்டை திப்பு நகர், மைசூரு ரோடு ஆனந்தபுரம் ஆகிய இடங்களை பார்வையிட்டார்.குடிநீர் குழாய்களில் கசிவு குறித்து, கவனம் செலுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கழிவுநீர் செல்லும் கால்வாய், சுற்றுப்புற பகுதியில் துாய்மையை கடைபிடிக்குமாறு ஆலோசனை வழங்கினார். மக்கள் அத்தியாவசிய தேவைகள், அரசின் உத்தரவாத திட்டங்கள் கிடைக்கின்றதா, அதில் குறைபாடுகள் உள்ளனவா என்பதையும் கேட்டறிந்தார்.சமீபத்தில், மின்சாரம் தாக்கி உயிரிழந்த செல்வி என்ற பெண் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். ஐந்து லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கினார். மின் கசிவு ஏற்படாதவாறு கவனித்துக்கொள்ள மின் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.வட்டார பிரமுகர்கள் பாலகிருஷ்ணன், மாரிமுத்து, தண்டபாணி உட்பட பலர் உடன் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ