அமைச்சர் மங்கள் வைத்யா ரூ.8.17 லட்சம் மின் பாக்கி
பெங்களூரு,: மாநில மீன் வளத்துறை அமைச்சர் மங்கள் வைத்யா, ஓராண்டாக மின் கட்டணம் செலுத்தவில்லை. 8 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான கட்டணத்தை வசூலிக்க முடியாமல், மின் வினியோக நிறுவனம் திணறுகிறது.காங்கிரஸ் அரசு வந்த பின், மக்களுக்கு மாதந்தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும், 'கிரஹ ஜோதி' திட்டத்தை செயல்படுத்தியது. இது மக்களுக்கு உதவியாக உள்ளது. ஏழை குடும்பத்தினரை மனதில் கொண்டு, இந்த திட்டத்தை அரசு செயல்படுத்தியது.ஆனால், அமைச்சர் ஒருவரும் இத்திட்டத்தை பயன்படுத்துகிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.கர்நாடக மீன் வளத்துறை அமைச்சர் மங்கள் வைத்யா, ஓராண்டாக மின் கட்டணத்தை செலுத்தவில்லை. அரசுக்கு சுமையை ஏற்படுத்துகிறார். அவர் இதுவரை 8,17,415 ரூபாய் மின் கட்டணம் செலுத்தவில்லை. பட்கலில் உள்ள தன் வீடு, பள்ளி கட்டடங்கள், மகளின் பெயரில் உள்ள கட்டடங்களின் மின் கட்டணத்தை அவர் செலுத்தவில்லை என்பது தெரிய வந்தது.இவரிடம் எப்படி மின் கட்டணத்தை வசூலிப்பது என, தெரியாமல் மின் வினியோக நிறுவன ஊழியர்கள் கையை பிசைகின்றனர். மாதந்தோறும் அரசிடம் லட்சக்கணக்கான ரூபாய் ஊதியம், இதர படிகள் பெறும் அமைச்சர், மின் கட்டணம் செலுத்தாதது சரியல்ல என, பலரும் கருத்து தெரிவித்துஉள்ளனர்.