உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிப்.1ல் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

பிப்.1ல் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பிப்.1ம் தேதி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பார்லி. கூட்டத்தொடர் வரும் ஜன.31ம் தேதி தொடங்கி பிப்.13ம் தேதி வரை நடக்கிறது. அந்த கூட்டத்தொடரின் போது பிப்.1ம் தேதி 2025க்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்தியில் பா.ஜ., தலைமையிலான அரசின் ஆட்சியில் 3வது முறையாக முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட் தொடர்பாக தொழில்துறை உள்ளிட்ட பல்வேறு துறையினருடன் அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு மாதம் ஆலோசனை நடத்தி அவர்களின் எதிர்பார்ப்புகள், கோரிக்கைகளை கேட்டறிந்தார். இந்த முறை வரிமுறையை எளிமைப்படுத்துதல், முதலீடு மற்றும் அதனை சார்ந்த வளர்ச்சி குறித்த பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக சனி மற்றும் ஞாயிறுகளில் பங்குச் சந்தைகள் விடுமுறை. இந்த முறை பிப்.1ம் தேதி சனிக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. ஆகையால் அன்றைய தினம் பங்குச் சந்தைகள் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

venugopal s
ஜன 18, 2025 16:04

அரைச்ச மாவை அரைப்போமா? துவைச்ச துணியை துவைப்போமா? என்று பாடிக்கொண்டே பட்ஜெட் போடுவாரோ?


pmsamy
ஜன 18, 2025 11:19

தமிழ் இனத்திற்கு ஒரு அசிங்கம் என்றால் அது நிர்மலா சீதாராமன்


N Sasikumar Yadhav
ஜன 18, 2025 17:18

லட்சக்கணக்கான கோடி ரூபாய்களை புள்ளிராஜா இன்ட கூட்டணி போல ஊழல் செய்யாமல் கையாளும் மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சிதாராமன் அவர்கள் தமிழக பொக்கிஷம் . திருட்டு என்னம் கொண்ட சில களவானிகளுக்கு நிதியமைச்சரை பிடிக்க வாய்ப்பில்லை


அன்பே சிவம்
ஜன 18, 2025 02:45

1).மத்திய மாநில அரசுகளின் வரிவிதிப்புக்கு திப்பு சுல்தான் அட்சியே பரவாயில்லை போல் தோன்றுகிறது 2). வங்கிகள் கொள்ளை அடிக்கின்றனர். முதல்தர கொள்ளையர்கள் வங்கிகள் தான். 3). நடுத்தர மக்களிடம் சேமிப்பு என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பார்கள். 4). சம்பளத்தில் வரி கட்டுபவர்களுக்கு எந்த சலுகையும் கிடையாது. 5). நடுத்தர சிறு குரு தொழில்கள் மற்றும் நடுத்தர மக்களை கசக்கி பிழிந்து எடுத்து சக்கையாக மாற்றி விடுவார்.


தாமரை மலர்கிறது
ஜன 18, 2025 01:52

வளர்ச்சி பெறாத வடஇந்திய மாநிலங்களில் ஜிஎஸ்டியை பத்து சதவீதம் குறைக்க வேண்டும். அதனால் ஏற்படும் நட்டத்தை ஈடுகட்ட தென்மாநிலங்களில் பத்து சதவீதம் அதிகரிக்க வேண்டும். இதனால் பல கம்பெனிகள் வடஇந்தியாவிற்கு நகரும். அங்குள்ள தொழிலாளிகளுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். அதனால் அவர்கள் தமிழகத்திற்கு வரும் எண்ணிக்கை குறையும். சமசீரான வளர்ச்சி இந்தியாமெங்கும் தேவை. சமூகநீதி பார்வை என்பது இதுதான்.


Venkat
ஜன 17, 2025 22:52

All Middle class people, Lets all have a NAMAKATTI in hand ready on Feb 1, to draw 3 vertical lines on our forehead.


RAMAKRISHNAN NATESAN
ஜன 17, 2025 22:01

உலகிலேயே மிக அதிகமான ஜிஎஸ்டி வசூலிக்கும் நாடாக 28% இந்தியா இருக்கிறது. 18% ஜிஎஸ்டி என்பதேகூட பிற நாடுகளில் மிகக் குறைந்த பொருள்களுக்குத்தான் சுமத்தப் படுகிறது. இந்தியாவின் பெரும்பாலான பொருள்கள் 18% வரம்புக்குள் கொண்டுவரப் பட்டிருக்கின்றன. அதுவும் போதாதென்று விதவிதமான ‘செஸ்’ உள்ளிட்ட கூடுதல் வரிகள் வேறு .... ஐந்து நட்சத்திர விடுதிகள், சுற்றுலாப் பயணிகளுக்கான ‘ரிசாா்ட்’ எனப்படும் சொகுசு விடுதிகள் மீதான 28% வரிவிதிப்பு, சுற்றுலாப் பயணிகளின் வருகையை வியத்நாம், தாய்லாந்து, இலங்கை போன்ற நாடுகளை நாட வைத்திருக்கிறது. ஆயத்த ஆடைகள் மீதான கூடுதல் வரி விதிப்பால் ஒரு லட்சம் போ் வேலைவாய்ப்பை இழக்கக் கூடும் என்று கூறப்படுகிறது ..... பெரும்பாலான நாடுகளில் ஒரே ஒரு ஜிஎஸ்டி வரி விதிப்பு இருக்கும்போது, இந்தியாவில் 0%, 3%, 5%, 12%, 18%, 28% என்று ஆறு பிரிவுகள் இருப்பது என்பதே அபத்தமானது. இதனால் தங்களுக்குக் கணக்கு எழுதவோ, கணக்குத் தாக்கல் செய்ய ஊழியா்களையோ, பட்டயக் கணக்காயா் களையோ வைத்துக்கொள்ள முடியாத சிறு வியாபாரிகள் படும் அவஸ்தையைச் சொல்லி மாளாது ..... தன்னிச்சையாக ஒரு சில ஜிஎஸ்டி குழு உறுப்பினா்களால் வரிவிதிப்பு அறிவிக்கப்படுவது, இந்தியாவின் ஜிஎஸ்டி முறையில் காணப்படும் மிகப் பெரிய முரண். ராஜஸ்தான், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், கேரளம், கா்நாடக நிதியமைச்சா்கள் அடங்கிய ஜிஎஸ்டி கவுன்சிலின் தலைவராக பிகாா் நிதியமைச்சா் விளங்குகிறாா் என்பதால், எதிா்க்கட்சி மாநிலங்களின் பிரதிநிதித்துவம் இருப்பது உண்மை. ஆனால், வரி செலுத்துவோரின் குரலை யாா் பிரதிபலிப்பது? பட்ஜெட் தயாரிப்பில் தொழில்துறை நிறுவனங்கள் சாா்பில் பிரதிநிதிகளை நிதியமைச்சா் கலந்தாலோசிக்கிறாா். முக்கியமான மசோதாக்களில், மக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க அவகாசம் வழங்கப்படுகிறது. அதற்குப் பிறகுதான் சட்டமாகிறது. மக்களின் கருத்துக்கு நாடாளுமன்றம் இடமளிக்க முடியுமானால், ஜிஎஸ்டி கவுன்சிலும் ஏன் அதற்கு வழிகோலக் கூடாது? ஜிஎஸ்டியின் நோக்கம் வரி விதிப்பு முறையை முறைப்படுத்தி, நுகா்வோரைப் பாதுகாப்பதா?, இல்லை அளவுக்கு அதிகமாக நிதி ஆதாரத்தை ஏற்படுத்திக் கொள்வதா? உலகிலேயே முதல்முறையாக விற்பனை வரி விதிப்பை அறிமுகப்படுத்திய மூதறிஞா் ராஜாஜி சொன்ன உதாரணத்தை ஜிஎஸ்டி கவுன்சில் நினைவில் கொள்ள வேண்டும். ‘‘வரி விதிப்பு என்பது மலரிலிருந்து வண்டு தேனை உறிஞ்சுவதுபோல... மலருக்கும் வலிக்கக் கூடாது தேனையும் எடுக்க வேண்டும்.’’


ஆரூர் ரங்
ஜன 17, 2025 20:53

அரைகுறை 200 உ.பி கூட்டமே. ஜிஎஸ்டியை முடிவு செய்வதில் மாநில அரசுகளுக்குதான் அதிக அதிகாரமுள்ளது. ஜிஎஸ்டி பற்றிய 97 சதவீத முடிவுகள் ஒருமனதாகவே நிறைவேற்றப்பட்டவை. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கூடுதல் நிதி வசூலுக்கு கூக்குரல் எழுப்பிவிட்டு வெளியில் வந்தவுடன் பழியை மத்திய நிதியமைச்சர் மீது போடும் அராஜக கூட்டத்தை பயங்கரவாத தடைச் சட்டத்தில் உள்ளே தள்ளவேண்டும்.


Ramesh Sargam
ஜன 17, 2025 20:42

பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட சில நாட்களிலேயே, பார்லியமென்ட் விவாதத்தின்போது எதிர்க்கட்சியினர் அந்த பட்ஜெட் பற்றி குறைகூறி தாக்கல் செய்வார்கள். இது வழக்கமான ஒரு செயல்பாடு இந்தியாவில்.


Bhaskaran
ஜன 17, 2025 20:08

எந்தெந்த வகையில் நடுத்தர மக்களுக்களை கசக்கி இன்னும் அதிக வரி போடுவதில் இந்த அம்மாவுக்கு முனைவர் பட்டம் வழங்கலாம்.மத்திய அரசு ஊழியருக்கு சமபள கமிஷன் ஓய்வுபெற்ற தனியார் நிறுவன ஊழியர் பென்ஷன் உயர்வுக்கு அல்வா வாழ்க நீடூழி அம்மையார்


Rajarajan
ஜன 17, 2025 19:54

ஆங், சொல்ல மறந்துட்டேன். பாப்கானுக்கு வரி போட்டாச்சு. மறக்காம பலப்பத்தையும் சேர்த்துக்கோங்க.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை