உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமைச்சர் வர்மா ஆய்வு

அமைச்சர் வர்மா ஆய்வு

பொதுப்பணித் துறை அமைச்சர் பர்வேஷ் வர்மா, வெள்ளம் சூழ்ந்த யமுனை நதிக்கரை பகுதிகளை நேற்று ஆய்வு செய்தார். அப்போது, நிருபர்களிடம் வர்மா கூறியதாவது: யமுனையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், சிவில் லைன்ஸ் பகுதிக்குள் வெள்ளம் புகவில்லை. இடைவிடாமல் பெய்த கனமழையால் தண்ணீர் தேங்கியது. யமுனை வெள்ளம் சாலைகளுக்குள் புகாமல் தடுக்க, சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள வடிகால்களின் முகத்துவாரங்கள் முன்னெச்சரிக்கையாக மூடப்பட்டன. யமுனைக்கும் சிவில் லைன்ஸ் பகுதிக்கும் இடையில், ரிங் ரோட்டிலிருந்து 10 அடிக்கு கீழே ஒரு அகலமான ஸ்லிப் சாலை உள்ளது. அந்த ஸ்லிப் சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளது. அதை அகற்றும் பணி நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை